பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

419


ரோமாபுரிப் பாண்டியன் 419 'ஆமாம் இவராவது கிரேக்க நாட்டையோ, ரோமாபுரியையோ சார்ந்த உண்மையான யவனக்கிழவரா? அல்லது தமிழ்நாட்டவர் தானா?" வேடிக்கையாகக் கேட்டான் கரிகாலன். "இவரும் தமிழ்நாட்டவர்தான்!" என்றார் காரிக்கண்ணனார். "பரவாயில்லையே! நம் நாட்டில் இப்போது நடந்து காட்டுகின்றவர் களைவிட நடித்துக் காட்டுகிறவர்களுக்குத் தான் பஞ்சமே இல்லை என்று தெரிகிறது. ஆமாம். இவரும் இருங்கோவேளைப் போலவே ஆட்சி யைப் பிடிக்கத்தான் இப்படி வேடம் போடுகிறாரா?" "இல்லை அரசே! ஓர் அணங்கின் கையைப் பிடிக்கத்தான் இந்த யவனக்கிழவர் வேடம்!" "பலே பலே! அப்படி யார் இந்தக் கிழவரிடம் மயங்கிய கிள்ளை? ஒரு வேளை அவளுக்கும் இவரைப் போல் அறுபது வயதிற்குக் குறையாமல் இருக்குமோ?" என்று கேட்டுவிட்டு இடியென நகைக்க லானான் கரிகாலன். உண்மையில் இவர் கிழவர் இல்லை மன்னவா! இளைஞர்தான்!" ஆம்! அரசே! இனிமேல் தங்களிடம் எதற்குத்தான் மறைக்க வேண்டும்?" என்றவாறே அந்த மூன்றாவது யவனக் கிழவர், மேலே உடுத்தியிருக்கிற பெரிய அங்கியையும் தலையை மூடியிருந்த போலி முடியையும் களைந்தார். பார்த்தால் அசல் இளைஞர். களையொழுகும் முகம். எந்த நாட்டுக் கேனும் இளவரசராகத்தான் இருக்க வேண்டும் என்று திடமாகப்பட்டது கரிகாலனுக்கு! சற்றுத் திகைப்புற்றவனாக அந்தப் புதிய ஆணழகனையே வைத்த விழியினை எடுக்காமல், மேலும் கீழுமாக ஆளையே அளந்து விடுவது போல் நோக்கினான் அவன். நான் சிறையிலிருந்தவாறே ஓலைச்சுவடியில் செழியன் மூலமாக எழுதி அனுப்பிய அந்தப் பாடல் தங்கள் நினைவில் இருக்கிறதா அரசே?" என்று கரிகாலனின் சிந்தனையைக் கலைத்தார் காரிக்கண்ணனார். "ஓ நன்றாக நினைவில் வைத்திருக்கிறேனே! 'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த...' என்று தொடங்கும் அந்த இலக்கிய மலரின் இனிய மணத்தினை என்னால் எங்ஙனம் மறக்க இயலும்? பலாச் சுளையினும் மேலாக இனித்த அந்தப் பாடல் வரிகள் பசுமரத்தாணிபோல் என் நெஞ்சிலே நன்றாகப் பதிந்துதான் இருக்கின்றன. அவற்றைப் படித்ததாலும், கடியலூர் உருத்திரங்கண்ணனார் எடுத்துச் சொன்னதனா லுந்தானே தங்களைப் பற்றிய ஐயப்பாடு என்னைவிட்டு அகன்றது!