பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

421


ரோமாபுரிப் பாண்டியன் 421 'பாண்டியர்களின் மரபுப்படிப் பிற்காலத்தில் அரசராக அரியணை ஏற உரிமை பெற்றவர்கள், கொற்கைப் பட்டினத்தில் இளவரசராகப் பட்டஞ் சூட்டப்பெற்று அங்கேயே தங்கி ஆட்சித்துறைப் பயிற்சி பெற் றாக வேண்டும். அந்த மரபின்படியே தற்பொழுது கொற்கையில் தங்கி யுள்ளார் நம் இளவரசர். நாம் திடீரென்று விழாவுக்கு ஏற்பாடு செய்து விட்டப்படியால் இவரால் குறித்த காலத்தில் வந்து சேர இயல வில்லையாம்!” "ஓ!இப்பொழுதுதான் பெருவழுதிப் பாண்டியர் இவரைப் பற்றிச் சொன்னவையெல்லாம் நினைவிற்கு வருகின்றன” என்ற கரிகாலன் இளைஞரை நோக்கி. "உங்கள் பெயர் இளம்பெருவழுதிதானே?" என்று கேட்டான் நேரடியாக. ஆம், அரசே!" என்று பணிவுடன் பகர்ந்து முறுவலித்தான் இளம்பெருவழுதி. "நீங்கள் ஓர் இயற்கைப் பாவாணராமே! சிறு பிள்ளையாக இருந்தபொழுது அருமையாகப் பாடல்கள் புனையத் தொடங்கி விட்டீர்களாமே?" ஆம் அரசே! இவரது பாக்கள் கற்பனைப் பூக்காடு மட்டுமல்ல; கருத்துப் புதையலும்கூட! இவருடைய உணர்ச்சிக் கடலான பாடல்களில் என் உள்ளத்தைப் பறிகொடுத்துத்தான் இவர்தம் நட்பினை நான் வலிந்து பெற்றேன்" என்றார் காரிக்கண்ணனார். "அப்படியானால் தமிழ்ப் புலமைதான் உங்கள் இருவரையும் இணைத்து வைத்த உறுதியான பாலம் என்று சொல்லுங்கள்!" "அதிலே ஐயப்பாடு என்ன மன்னவா? அந்த நட்பின் ஆழத்தை ஆதாரமாகக் கொண்டே என் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நான் துணிந்து முற்பட்டேன். என்னால் இந்தப் புலவர் பெருந்தகை அடைய நேர்ந்த எல்லையற்ற தொல்லைகளெல்லாம் தங்களுக்கே தெரிந் தவைதான். "நான் புரிந்த ஒரு சிறு தவற்றினால் - என் இடுப்பில் செருகியிருந்த 'இருங்கோவேள்' எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பதக்கம் இவர் வீட்டிலே தவறி விழுந்துவிட - அதனால் இவர் மகளே இவரை ஐயமுற்றுத் தங்களின் துரோகியாகவே கருதிச் செயல்படுகின்ற கொடிய நிலையும் உருவாயிற்று" என்றான் இளம்பெருவழுதி. "ஆமாம்; அந்த இருங்கோவேள் பதக்கம் உங்களுக்கு எப்படித்தான் கிட்டியது?"