424
கலைஞர் மு. கருணாநிதி
424 கலைஞர் மு.கருணாநிதி ஆம், அவளுடைய பின்புற அழகிலேயே அவன் தன்னை மறந்தான். அவள் முழுமையாகத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தலையினைச் சற்றே சாய்த்துத்தான் நடந்தாள். அந்தச் சாயலிலேயே அவளுடைய கதுப்புக் கன்னங்களின் மிதப்புத் தெரிந்தது. அவன் அதன் மாதுளங்கனி மெருகிலே தன் மதியினை இழந்தான். விழாவினைத் தாம்தான் தொடங்கி வைத்திட வேண்டும் என்னும் நினைப்பையும் இழந்தான். தேரைவிட்டுக் கீழே இறங்கி அவள் செல்லும் திசையையே பார்த்த வண்ணம் கல்லாகவே சமைந்துவிட்டான் அவன்! பின்னால் சற்றுத் தள்ளியே குதிரைமீது மெள்ள வந்து கொண்டிருந்த மெய்க்காவலன், தேர் நின்றதைக் கண்டதும் திடுக்கிட்டான். கடையாணி தான் கழன்றுவிட்டதோ. அச்சுத்தான் முறிந்துவிட்டதோ என்னும் கவலையுண்டாகி விட்டது. ஆனால் அருகில் நெருங்கி வந்ததும் தொலைவில் அசைந்து செல்லும் தோகையொருத்தியினால் இளவரச னின் சிந்தனைதான் கழன்றிருக்கிறது என்பதனை முழுதும் புரிந்து கொண்டான். அதனைக் காட்டிக் கொள்ளாமல், “ஏன் இளவரசே, இறங்கி விட்டீர்கள்? தேருக்கு ஏதாவது...?" என்று திகைத்தாற்போல் கேட்டான். "என் தேருக்கு எதுவுமில்லை. ஆனால் அந்த அழகுத் தேர்!' ஓ! அதுதானே? விரைவிலேயே யார் என்று தெரிந்து வந்து சொல்லிவிடுகிறேன். ஆனால் நாம் இப்போது உடனே விழா நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். எல்லாரும் தங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்." ...ம் சரி..." என்று தயங்கியவாறே இளம்பெருவழுதி தேரிலே ஏறினான். புரவிகளை மிக விரைவாக முடுக்கி விட்டான். அவன் கண்கள் மட்டும் தாழம்புதருக்கு அப்பால் ஆற்றுப்படுகையில் இறங்கி மறைந்துவிட்ட அந்த அணங்கு சென்ற திக்கையே துழாவித் துழாவி அலைந்தன. தனக்கு ஆட்சித்துறைப் பயிற்சியளிக்கும் ஆய்வுரையாளர் (ஆலோசகர்) நிலையிலுள்ள அறவாணர், கடற்கன்னிக்கு முறைப்படி வணக்கஞ் செலுத்திவிட்டு வலம்புரிச் சங்கினை எடுத்துத் தன்னிடம் வழங்கியதும் அதனை மூச்சைப் பிடித்துக் கொண்டு ஊதி முழக்கம் எழுப்பினான் இளம்பெருவழுதி. உடனே, தமக்குரிய தற்காப்பு உடைகளோடும் கருவிகளோடும் அலைகள் முத்தமிடும் கரையோரத்தில் வரிசையாக நின்றிருந்த மீனவக் . •