426
கலைஞர் மு. கருணாநிதி
426 கலைஞர் மு.கருணாநிதி அடுத்த அங்காடியில் கன்னியர்களின் கலீர்ச்சிரிப்பு, எதிரொலி எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த வணிகன் நகைச்சுவையாகப் பேசுவதில் நன்கு தேர்ந்தவன் போலும்! குழலில் அணியக்கூடிய 'முத்துக் கொண்டை' யைக் கையிலே வைத்துக் கொண்டு ஏதோ விலையினைக் கூறியவாறிருந்தான் வேடிக்கையாக. அதற்கு எதிர்த்தாற்போலுள்ள இன்னொரு அங்காடியில் முதியவன் ஒருவன் மருந்தாகப் பயன்படக்கூடிய 'முத்துக் கற்கம்' 'முத்துச் சுண்ணம்' முதலானவற்றை விற்றுக் கொண்டிருந்தான். மணப்பந்தலில் தூவக்கூடிய 'முத்து மண'லும் அவனிடம் இருந்தது. சிறிது தூரத்தில் கட்டுடல் அமைந்த காளையொருவன் சங்குப் பொருள்களாகப் பரப்பி வைத்தவாறு ஏதேதோ கதைகள் அளந்து கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான். அவன் கூறினான்; 66 "இதோ, இது ஆயிரம் சிப்பி சூழ்ந்த இடம்புரிச்சங்கு! சாதாரணம தானதுதான்! கழஞ்சுகள் நிறைய இல்லாதவர்கள் இதை வாங்கிக்கொள்ள லாம். ஆனால்... இதோ, இது ஆயிரம் இடம்புரிச் சூழ்ந்த வலம்புரிச் சங்கு! இதை வைத்திருப்பவர்களுக்கு செல்வங்களெல்லாம் தானாக வந்து குவியும்! வாங்கத் தவறி விடாதீர்கள்! வாய்ப்பினை இழந்து விடாதீர்கள்!" " அந்தக் காளையின் அங்காடிக்கு எதிர்த்தாற்போல் ஒரு நடுத்தர வயதினன் 'இதோ, இந்தச் 'சலஞ்சலச் சங்கு வலம்புரியைவிட உயர்ந் தது; ஆயிரம் வலம்புரி சூழ்ந்ததுதான் சலஞ்சம்! இதோ! இது இதைவிட உயர்ந்தது.பாஞ்சசன்னியம்!" என்றெல்லாம் உரக்கக் கூவினான். அவன் அத்துடன் நிறுத்தவில்லை. "இதோ, இந்தச் சங்கு என்ன தெரியுமா? வடபுலத்தில் உள்ள சாஞ்சியிலே அசோக மன்னர் அழகான பெருந்தூபியை எழுப்பியிருக்கிறார் இல்லையா? அதிலுள்ள சங்குச் சிற்பங்களெல்லாம் இந்தச் சங்கைப் பார்த்துத்தான் செதுக்கப்பட்டன!' - இதைக் கேட்டதும் இளம்பெருவழுதியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. < 'அசோகன் காலம் எங்கே? இங்கே நிற்கும் இவனுடைய காலம் எங்கே? அந்தச் சங்காகவே இருந்தாலும் அதனைக் கருத்தோடு பாதுகாத்திருக்க மாட்டார்களா? இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு பளபளப்போடா இவன் கைக்கு அது எளிதில் கிட்டியிருக்க முடியும். ம் வணிகம் என்றாலே பொய்ம்மைகளின் புதையல்தான் போலும்" என்று எண்ணியவாறே தன் தேரினை நகர்த்தினான்.