பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

429


ரோமாபுரிப் பாண்டியன் 429 'நம்புவதென்ன? நான் நேரிலே என் கண்ணாறவே கண்டு விட்டேனே!' “என்ன! கண்ணாறக் கண்டீர்களா?" "ஆம்; அறவாணரே! இன்று காலை முத்துக்குளிப்பு விழா எத்துணைக் கோலாகலமாக நடந்தேறியது! அவற்றுக் கெல்லாம் சேர்த்து வைத்துக் கரியைப் பூசினமாதிரி தான் அந்தக் காட்சியை நான் கண்டேன். விழா முடிவுற்றதும் அங்காடிகளின் வழியாகத் தேரினில் வந்து கொண்டிருந்தேன்; அப்போது அங்கே ஒரு வன்னிமரம் நிற்கிறதல்லவா? அதன் எதிரேயுள்ள அங்காடியின் முகப்பிலே, நம் மக்களுக்கு தெரியாத தெரியத் தேவையும் இல்லாத - 'மாகதி'- மொழியிலே தன் அங்காடி யின் பெயரை ஒருவன் வேண்டுமென்றே பலகையில் எழுதித் தொங்க விட்டுள்ளான். தமிழைப் புறக்கணிக்கும் போக்கிலே உள்ள அதனை எடுத்துவிடுதலே அறம் என்று நாம் சொன்னால், 'நம்மவர்கள்' சிலரே அதற்கு எதிர்ப்பினைக் காட்டுகின்றனராம்!" "தாங்கள் சொல்வதைக் கேட்கும்பொழுது மிகுந்த வேதனையாக இருக்கிறதே! மிகவும் விழிப்போடு நாம் இருக்க வேண்டுமே! அயல் மொழிக் 'களை' களுக்கெல்லாம் ஆக்கம் தந்தால் பிறகு தமிழ்ப் 'பயிர்' தானாகவே மடிந்திட வேண்டியதுதான். பெற்றெடுத்த தாயினைப் பட்டினி போட்டுவிட்டு எதிர் வீட்டுக்காரிக்கு இனிப்புப் பொங்கலா? நன்றாக இருக்கிறதே நம்மவரின் போக்கு. ஆமாம்; அந்த மாகதி மொழியை இப்போது இங்கே திணித்திடவேண்டிய இன்றியமையாமை தான் என்ன? அந்த அங்காடிக்காரன் அயல் நாட்டவனா? அல்லது நம் நாட்டவன் தானா?" "அவன் எந்த நாட்டவனாக இருந்தாலும் இருந்து தொலையட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், இந்த மண்ணிலே குடியேறிய பிறகு. இந்த மண்ணைக் கொண்டே பிழைக்க முற்பட்டு விட்ட பிறகு இந்த மண்ணுக்கு நன்றியுள்ளவனாக அவன் நடந்து கொள்ள வேண்டாமா? ஊழூழிக் காலமாக இந்த மண்ணுக்கே உரிமை யுள்ள மொழியைக் கெடுக்கலாமா? உணர்வைப் பொசுக்கலாமா? இனத்தைக் குலைக்கலாமா? நம்முடைய தமிழை அவனுடைய நாட்டிலே கொண்டு போய்ப் புகுத்திட முற்பட்டால் அவன் பொறுத்துக் கொள்வானா? எனவே, இவ்வாறெல்லாம் நம் மொழியை -பண் பாட்டை - நெறியைக் குறுக்கு வழியிலே கொல்லப் பார்ப்பது அறம் பிறழ்ந்த செயலல்லவா என்று எடுத்துக் காட்டினால், நாம் குறுகிய நோக்கம் கொண்டவர்களாம்! சிறுபான்மையர் நலத்தைப் பேணிடத் தவறுகிறோமாம்!"