பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

431


ரோமாபுரிப் பாண்டியன் 431 வதில் தவறில்லைதான். ஆனால் நாளடைவில் அவற்றின் ஆதிக்கம் நம்முடைய செந்தமிழையே சிதைத்திடும்; அழித்திடும்; எனவே மிக மிக எச்சரிக்கை தேவை." உ "தாங்கள் மொழிவது நூற்றுக்கு நூறு உண்மைதான். அறவாணர் அவர்களே! இப்பொழுதே அவன் கழஞ்சுகளையும், மதுப் பொருள் களையும் அன்பளிப்பாக அள்ளி வீசி நம்மவர் சிலரையே தன் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி. அவனை உடனே சிறைப்படுத்திடலாம் என்றாலும் மிகவும் சிந்திக்க வேண்டியுள்ளது. முழுப் பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல் - தமிழை இழிவுபடுத்தும் தன் உள்நோக்கத்தை ஒளித்துக் கொண்டு பொதுவாக அங்காடிக்காரர்களையே நாம் அவமதித்து விட்டதாக அவன் திசை திருப்புவானோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. ஆயினும் என்ன நேர்ந்தாலும் - என் உயிரே போவதானாலும் என் அன்னை மொழிக்கு ஊறு ஏற்பட நான் எந்தக் காலத்திலும் இடந்தரவே மாட்டேன்"- இளம்பெருவழுதி இவ்வாறு அறைகூவல் விடுத்திடும்பொழுதே மெய்க்காவலன் பரபரப்புடன் நுழைந்தான். . இளவரசே! ஒரு திடுக்கிடும் செய்தி!" என்றான். திடுக்கிடும் செய்தியா? என்ன அப்படி?" என்று மெய்க்காவலனை நோக்கிப் பரபரப்புடன் வினவினான் இளம்பெருவழுதி. "அந்த அங்காடிக்காரன், வேற்றுமொழியிலே வேண்டுமென்றே பெயர்ப்பலகையை எழுதித் தொங்கவிட்டி ருந்தான் அல்லவா? அதனை எடுத்திடுமாறு நம் காவல் மறவன் வலியுறுத்தியதையும், அதற்கு அவன் முடியாது என்று வாதிட்டதையும் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்களில் சிலரே இப்போது கிளர்ச்சியில் இறங்கி விட்டார்கள்". '"கிளர்ச்சியா? எதற்கு?' "அந்தப் பலகையை அவன் அகற்றியே தீர வேண்டும் என்றுதான். "அதுதானே பார்த்தேன்! நம்முடைய மக்களுக்குத் தாய்மொழிப் பற்றும், தன்மான உணர்வும் பட்டுப் போய் விடாது!" என்று நிம்மதியுற்ற அறவாணர், தாமே மெய்க்காவலனைப் பார்த்துக் கேட்டார். "மற்ற அங்காடிக்காரர்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? தொழில் துறை என்கிற அளவில் ஒரே பிரிவினர் என்னும் உணர்வைப் பெரிதுபடுத்தி எதையும் ஆராய்ந்து பார்த்திடாமல், அவனுக்கேதான் துணை நிற்கிறார்களா?" "இல்லை, அறவாணர் அவர்களே! அங்காடிக்காரர்களுள் பெரும்பாலோர் நம் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். முதலில் சிறிது