பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

கலைஞர் மு. கருணாநிதி


432 கலைஞர் மு. கருணாநிதி தெளிவில்லாமல் அவனுக்குப் பரிந்து பேசியவர்களும்கூட இப்போது திரும்பிவிட்டார்கள்; தங்கள் கருத்தினைத் திருத்திக் கொண்டு விட்டார் கள். இதிலே இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? ஊமையன் முன்னால் மூக்கினைச் சொரிந்து ஆத்திரத்தை மூட்டிடும் போக்கில், அந்த அங்காடிக்காரன் நடந்துகொண்டது தவறுதான் என்றும், தமிழைப் புறக்கணித்துத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் அவனுடைய புன்மையான செயலினைத் தடுத்திடத்தான் வேண்டும் என்றும் ரோமாபுரியைச் சார்ந்த யவனர்கள் மட்டுமல்ல. வடபுலத்தைச் சார்ந்த சிலரும் கூட ஒப்புக் கொள்கிறார்கள்". "இது இன்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருக்கிறதே! பார்த்தீர்களா. இளவரசே! தொடக்கத்திலே தோல்விகளைச் சந்தித்திடி னும், அறத்திற்கும் உண்மைக்கும் என்றைக்குமே அழிவில்லை என்பது தெரிகிறதல்லவா?" என்று பெருமிதத்தோடு பகர்ந்து மகிழ்ந்தார் அறவாணர். "ஆமாம். இப்போது கிளர்ச்சியின் நிலைமை என்ன? அதை முதலில் சொல்" என்று மெய்க்காவலனை வினவினான் இளம்பெருவழுதி. அது தான் வருந்திடத்தக்க வகையில் திரும்பிவிட்டது இளவரசே! அந்த அங்காடிக்காரனிடம் கழஞ்சுக் கடனும் அன்பளிப்புகளும் பெற்றிருந்த சிலர், அமைதியான முறையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது முரட்டுத் தனமாகப் பாய்ந்து மூன்று பேரைக் கொன்று விட்டார்கள்; முப்பது பேருக்கு மேல் கொடிய காயம்... "என்ன! மூன்று பேர் மடிந்து விட்டார்களா? நம்முடைய கரங்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தியிருக்கிறானே அந்த அங்காடிக்காரன்!" "ஆம் இளவரசே! இந்தக் கலகத்திலே ஒரு காரிகைக்கும் வலுவான அடி- காயம். ஆனாலும் அதை அவள் பொருட்படுத்தவே இல்லை; வீராங்கனையாகச் சீறிப் பாய்ந்து அந்த வேற்று மொழிப் பலகையைப் பிடுங்கி வீசியெறிந்து விட்டாள் புழுதியிலே. அந்த அங்காடிக்காரனின் ஆட்கள் அவளை நையப்புடைக்க முற்பட்டனர். அவள் அந்தப் பலகையை எடுத்துத் தற்காத்துக் கொண்டே நகர்ந்தவள், அருகிலிருந்த கிணற்றிலே அதனைப் போட்டு விட்டு ஓடியே போய்விட்டாள் மாயமாக!' "இதற்கு மேலும் நாம் பொறுமையைக் காட்டிட வேண்டிய தேவை இல்லையே இளவரசே! உடனே அந்த அங்காடிக்காரனையும் அவனைச் சார்ந்த ஆட்களையும் சிறைப்படுத்திட வேண்டியதுதான்; படை வீரர்களை அனுப்பி உடனே கொந்தளிப்பை அடக்குவதும் இன்றிய