ரோமாபுரிப் பாண்டியன்
433
ரோமாபுரிப் பாண்டியன் 433 மையாதது. எதற்கும் இப்போதே நான் அங்காடிகளின் பக்கம் சென்று நிலைமையை நேரில் அறிந்து வருகிறேன். பிறகு தாங்கள் மாண்டவர் களையும், காயமுற்றவர்களையும் பார்வையிடச் செல்லலாம்." என்றவாறே அறவாணர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். அவர் சென்றதும் மெய்க்காவலன் சொன்னான்; ..
- அந்த வீராங்கனை யார் தெரியுமா? இளவரசே! தாங்கள் காலையில்
கண்டு மெய்மறந்தீர்களே. அவளே தான்!" “அப்படியா?வியப்பாக இருக்கிறதே! அவள் யார்?" அவள் நமது கொற்கை நகரத்துக் கோதையில்லையாம். ஏதோ வெளிநாட்டிலிருந்து முத்துக் குளிப்பு விழாவினை வேடிக்கை கண்டிட வந்தவள்தானாம். அதற்கு மேல் அவளைப் பற்றி உசாவுவதற்கு நேரம் இல்லை; கிளர்ச்சி பற்றி, உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே என்று ஓடோடி வந்துவிட்டேன்." ‘அந்த அங்காடிக்காரனும் அவன் ஆட்களும் அவளை வாளாவிட மாட்டார்களே! வாள் கொண்டு அவளை வெட்டித் தீர்த்தாலும் தீர்த்து விடுவார்களே! அவளை எவ்வாறேனும் நாம் காப்பாற்றியாக வேண்டுமே! சரி; முதலில் நம் சிறுபடைத் தளபதியை வரச்சொல். அந்த அங்காடிக்காரனும் அவன் ஆட்களும் எங்கே ஒளிந்திருந்தாலும் சிறைப்படுத்திடத்தான் வேண்டும்" என்று புலியென உறுமியெழுந்தான் இளம்பெருவழுதி. அவனுடைய எண்ணங்கள் யாவும் தமிழின் மானத்தைக் காப்பாற்றி டத் தன்னையே காணிக்கை ஆக்கத் தயங்கிடாத அந்தத் தையலைப் பற்றியே தழுவிப்படர்ந்தன.