பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

கலைஞர் மு. கருணாநிதி


448 கலைஞர் மு. கருணாநிதி பிறகு எனக்கு வாழ்வே இல்லை!” அழாத குறைதான் இளம்பெருவழுதி யின் குரலில்; அவ்வளவு உருக்கமாக எடுத்துச் சொன்னான் தன் உள்ளக் கிடக்கையை! .. ஏதேது. தாமரைக்காக பாண்டியநாட்டு அரியணையைக் கூட துச்சமெனக் கருதித் துறவுக் கோலமே பூண்டு விடுவீர்கள் போல் இருக்கிறதே!" என்று கேலியாகச் சிரித்த கரிகாலன் மேலும் தொடர்ந்தான்: "அதற்காக உள்ளத்தை உடையவிட்டு விடாதீர்கள்! எது எப்படி இருந்தாலும் தமிழுக்குப் புறக்கணிப்பு என்றதுமே நீங்கள் இருவரும் கொதித்து எழுந்திருக்கிறீர்கள். அந்த உங்களுடைய ஆழமான தன்மான உணர்வுக்கும் தாய்மொழிப் பற்றுக்காகவுமே உங்கள் இருவரையும் இணைத்துவைத்திட வேண்டாமா? உங்களைப் போன்றவர்களால் தானே எதிர்காலத்தில் நம் இனப்பெருமையையும் மொழிச் செழுமையை யும் அழித்திடாமல் காப்பாற்றிட முடியும்? எனவே, உங்கள் மனம்போல நீங்கள் மணம் புரிந்திட நான் உடனே பெருவழுதிப் பாண்டியருக்கு மடல் விடுத்து இசையச் செய்துவிடுகிறேன். போதுமா?" -சோழ மாமன்னனின் இந்தச் சொற்கள் இளம்பெருவழுதியின் இதயக் கிண்ணியில் தேன் துளி யாகவே விழுந்தன. அவன்பால் நன்றி - நம்பிக்கை - பூரிப்பு- புல்லரிப்பு எல்லாமே ஒன்றிக் கலந்து, அவன் விழியோரத்தில் நீர்த்துளி களாக அரும்பு கட்டின. மிகுந்த நன்றி மன்னவா! ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள்".. என்று தயங்கியவாறே தன் உதடுகளை அசைத்தான் அவன். " 6T GOT GOT?" "பொழுதுந்தான் விடிந்திடப் போகிறது. இருங்கோவேள் இறந்திட்ட செய்தியினை நானே போய்ப் பக்குவமான முறையில் தாமரையிடம் எடுத்துச் சொல்லி, அவளை இங்கே அழைத்து வருகிறேனே? இதனைக் கேட்டதும் கரிகாலனால் நகைக்காமல் இருந்திட முடிய வில்லை. அவன் காரிக்கண்ணனாரை நோக்கி மொழிந்தான். "பார்த்தீர்களா, புலவர் அவர்களே! சிறிது இடம் கொடுத்துப் பேசியதும் தன் காதலியை விரைவில் சந்தித்துப் பேசிட, எவ்வளவு திறமையாக திட்டம் இடுகிறார்! பிறகு அவன் இளம்பெருவழுதியின் பக்கம் திரும்பி, “ஏன், பார்த்துப் பலநாள் ஆயிற்றோ?" என்று வேடிக்கை யாகக் கேட்டான். இளம்பெருவழுதி அவனுக்கு என்ன விடையளிப்பான்? வெட்கத் தால் அவனது முகம் வெளிறிப் போயிற்று!