பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

கலைஞர் மு. கருணாநிதி


ஒரு காவலன் ஓடோடி வந்தான், அவன் கொணர்ந்திட்ட செய்தி. கரிகாலன், காரிக்கண்ணனார் இருவரையுமே திடுக்கிடச் செய்தது. அவன் பரபரப்புடன் பகர்ந்த செய்தி இதுதான். "தாமரையைக் காணோம்!" காவலன் கழறிய செய்தி கரிகாலனைத் திடுக்கிட வைத்ததோடு நின்றிடவில்லை; உள்ளூரச் சினநெருப்பு அவனிடம் சீறிக் கனன்றிடுமாறும் செய்துவிட்டது. எனினும் தான் அப்போது அடைந்திட்ட திடுக்கீட்டையோ சினத்தையோ வழக்கம்போல் வெளிப்படையாகப் புலப்படுத்திட வில்லை அவன்; விண்ணிலே ஒரு பனைமர உயரத்திற்கு மேல் பூவரசம் பூவைப்போல் மலர்ந்து சிரித்திட்ட விடிவெள்ளியையே வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தான் அமைதியாக. அவனுடைய அமைதிக்கு எப்பொழுதுமே இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று, ஆழ்ந்த சிந்தனை; மற்றது ஆத்திரம்! இப்போதைய அவனது அமைதிக்குக் காரணம், ஆத்திரமே! ஏனெனில் காணாமற்போயிருப்பது பச்சிளங் குழவி இல்லை! பசும் பொன் நகையும் இல்லை. உலகம் புரிந்த ஒரு மடந்தையே அரண்மனையை விட்டு மறைந்திருக்கிறாள்! அவள் தானாகத்தான் மதில் சுவர்களைக் கடந்து சென்றாளா. அல்லது மற்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டாளா என்றும் விளங்கிட இயலவில்லை. கரிகாலனின் எண்ணப் பேராற்றிலே என்னென்னவோ சுழற்சிக ளெல்லாம் ஏற்படலாயின. "...அந்த நாளில் தென்னிலங்கையை ஆண்டிட்ட வேந்தன் இராவண னின் இளவல் கும்பகர்ணன்தான், உறக்கத்தில் மன்னன் என்று கேள்வியுற் றிருக்கிறேன்; என்னுடைய அரண்மனைக் காவலாளிகளில் சிலரோ, அந்தக் கும்பகர்ணனையே மிஞ்சிவிடுவார்கள் போல் இருக்கிறதே! அவர்கள் மட்டும் கண் விழிப்போடு மட்டுமல்ல - கருத்து விழிப்போடும் இருந்திருந்தால் தாமரை தப்பிச் சென்றிட முடிந்திருக்குமா?" சரி, புலவர் அவர்களே! இனியும் நாம் இங்கே உரையாடிக் கொண்டிருப்பதால் என்ன பயன்? வாருங்கள் அரண்மனைக்குப் போவோம்; அங்கே என்னதான் நடக்கிறது என்பது தெரிந்திட