ரோமாபுரிப் பாண்டியன்
453
ரோமாபுரிப் பாண்டியன் 453 வேண்டாமா?" என்றவாறே கரிகாலன் அந்த மண்டபத்தை விட்டுக் கிளம்பினான். காரிக்கண்ணனாரும் அவனைப் பின் தொடர்ந்தார். இருங்கோவேள் சவமாகிக் கிடந்திடும் இடத்தினைத் தாண்டிச் சில அடிகள் தூரம் கூடச் சென்றிருக்க மாட்டார்கள். செழியன் அவர்களுக்கு முன்னே வந்து இறங்கி நின்றான், குதிரையிலிருந்து “அரண்மனையிலிருந்துதானே வருகிறாய் நீ? தாமரையைப் பற்றிய செய்தி ஏதாவது தெரியுமா?" என்று வினவினான் கரிகாலன். "தாமரை காணாமற் போய்விட்ட செய்திதானே? தெரியும். நானும் அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும் எங்கும் தேடிப் பார்த்து விட்டேன். தென்படவே இல்லை. எனக்கோர் ஐயப்பாடு "என்ன?" F "தங்கள் இருவரோடும் இருந்தாரே யவனக்கிழவர், அவர் இப்போது எங்கே?” "ஏன்?" "தாமரை தங்கியிருந்த மாளிகை அறையருகே யவனக் கிழவர் உருவம் ஒன்றைப் பார்த்ததாகத் தங்கள் மெய்க்காவலனிடம், காவலாளி ஒருவன் கூறியதைக் கேட்டேன். ஒரு வேளை அந்த மூன்றாவது யவனக்கிழவர்தான் தாமரையைக் கடத்திச் சென்றிருக்கலாமோ என்று கருதினேன்” செழியன் இவ்வாறு மொழிந்ததும் கரிகாலன், காரிக்கண்ணனார் இருவருமே திகைப்புற்று, ஒருவரையொருவர் பொருட்செறிவோடு பார்த்துக் கொண்டனர். இருவருடைய நெஞ்சின் அடிப்பரப்பிலும் இளம் பெருவழுதியைப் பற்றிய நினைவோட்டம், இனம் விளங்கிடாத கீறல்களை ஏற்படுத்திட முனைந்தது. காதல் மயக்கம் என்பது ஒரு விந்தையான வழுக்குப் பாறை அல்லவா? அதிலே கண்ணியம் என்னும் கட்டை விரலை ஊன்றி, இடறி விழாமல் நெடுநேரம் நடப்பதென்பது எல்லாருக்கும் எளிதான செயல் அல்லதான். ஆயினும் இளம்பெருவழுதி கொற்கை இளவரசன் என்னும் ஓர் உயர்ந்த பொறுப்பினுக்கும் உரிமை படைத்தவன் ஆயிற்றே? அவனும் மற்ற மற்ற மனிதர்களைப்போல் தன் மனம் போன போக்கிலே மையல் குளத்திலே விளையாட விழையலாமா? இளம்பெருவழுதி, மனிதர்கள் நடந்து செல்லும் வழியினைக் காத்திடும் காவலன் மட்டும் அல்லன்; புதிய வழிகளைப் படைத்துக் காட்டிடும் பாவலனும் ஆவான்; மற்றவர்களுக்கு வழிகாட்டிடும் அளவுக்குப் பாக்கள் புனைந்திடும்