458
கலைஞர் மு. கருணாநிதி
458 கலைஞர் மு. கருணாநிதி தங்களிடம் தந்திடவே இப்போது வந்துள்ளேன். மேலும் இன்னொரு செய்தியையும் தங்களிடம் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன். நானும் செழியனும் மற்ற பாண்டிய நாட்டு மறவர்களும், ஏன் காரிக்கண்ண னாரும் கூட, உடனடியாக மதுரை மாநகருக்கு வந்திடவேண்டும் என்றும் எங்கள் மன்னர் சொல்லியனுப்பியுள்ளார் அத்துடன் ரோமாபுரி நாட்டிலிருந்து தூதுவர் ஒருவரும் இப்போது அங்கே வந்துள்ளாராம்..." என்று கூறியவாறே பட்டுத் துகிலினால் பத்திரமாக மூடப்பெற்ற ஒரு மடலினை எடுத்துக் கரிகாலனிடம் பணிவுடன் நீட்டினான் நெடுமாறன். "என்ன, ரோமாபுரியிலிருந்து தூதுவர் வேறு வந்திருக்கிறாரா?" என்று திகைப்புடன் கேட்டவாறே மடலினைப் பிரித்துப் படிக்க முற்பட்டார் கரிகாலர். ஆனால்... அடுத்த கணமே அவரது பரந்த முகத்திலே இருள் கவிழ்ந்தது. பெருவழுதிப் பாண்டியன், திடீரென்று உடல் நலங்குன்றிப் படுக்கையில் விழுந்துவிட்டான் என்னும் செய்தியே கரிகாலனின் முகத்திலே இருளினைப் படரவிட்டதாகும். புலவர் காரிக்கண்ணனாரின் பெரு முயற்சியினால் அண்மைக் காலமாகத்தான் அவனது நட்பினில் திளைத்திடும் நல்வாய்ப்பினைப் பெற்றிருந்த போதிலும், படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழ்நூல் போல் பழகுதற்கு இனிய பண்பாளனே பாண்டிய வேந்தன் என்பதனை நன்கு உணர்ந்திருந்தான் சோழ மன்னன். தன் அரிய நண்பர் விரைவினில் குணம் பெற்றிட வேண்டுமே என்று அவன் வருத்திக் கொண்டான் மனத்திற்குள்ளேயே! ஆயினும் நோய் மிகக் கடுமையானதாகத்தான் இருந்திட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் தளபதி நெடுமாறனையும், செழியன் முதலான மறவர்களையும், உடனே தலைநகருக்கு அனுப்பி விடுமாறு மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது மட்டும் அன்று: அந்த மடலே மன்னனின் கைப்பட வரையப் பட்டிருக்க வில்லை; அவனது கையொப்பமும் அதிலே காணப்பட வில்லை. மாறாகப் பாண்டிய அரசின் நிர்வாகத்தினை இயக்கும் பல்வேறு ஆட்சித்துறைத் தலைவர்களுள் ஒருவரான (இக்கால 'அரசாங்கச் செயலாளர்' அல்லது இயக்குநர்களை நிகர்த்த) 'திருமுகம் எழுதுவோர்' தான் அம்மடலினைத் தீட்டியிருந்தார். ...இத்துணைக் கடுமையாகப் பெருவழுதி பிணியுற்றிருக்கும் செய்தி. கவணிலிருந்து புறப்பட்ட கல்லாகக் கொற்கைப்பட்டினத்தை நோக்கியும்