ரோமாபுரிப் பாண்டியன்
459
ரோமாபுரிப் பாண்டியன் 459 விரைந்து பறந்திருக்குமே! ஆனால், அதனைக் குறித்த காலத்தில் அறிந் திடவும், உடனே தன் தந்தையைக் கண்டிடும் பொருட்டு மதுரை மாநகர் நோக்கிக் கிளம்பிடவும் இளம்பெருவழுதி இந்நேரம் அங்கே இருந்திட முடிந்திருக்குமோ? தாமரையை அழைத்து வருவதாகக் கூறிச் சென்ற அவ்விளவரசன், திரும்பிவந்திடவில்லையே! அவளைக் காணோ மென்று கேள்வியுற்ற அளவிலேயே அவளைத் தேடிக்கொண்டு வேறெங்கேனும் சென்று விட்டாரோ? அப்படியானால், பாண்டிய மன்னன் நோய்வாய்ப்பட்டுவிட்ட நிலையில், மதுரை மாநகரிலேயே பல்வேறு அரசியல் சிக்கல்கள் பல்கிப் பெருகிடவும், புதிய வடிவங்கள் பெற்றிடவும் இடம் ஏற்பட்டு விடுமே!" என்றெல்லாம் எண்ணத் திவலைகள் கரிகாலனின் இதயத்தினுள்ளே தெறித்து விழுந்தன. ஆயினும் அவற்றினை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'சரி நெடுமாறரே! நீங்களும் உங்கள் வீரர்களும், இருங்கோவேள் எழுப்பிய பகைமைத் தீ பரவி விடாமல் அணைத்திடும் வகையில் எவ் வளவோ பணியாற்றினீர்கள்; துணை புரிந்தீர்கள். அவற்றை யெல்லாம் இந்தச் சோழ மண்ணிலே பிறந்தவர்கள் என்றுமே மறந்திட மாட்டார்கள். நீங்கள் உடனே மதுரை மாநகருக்கு திரும்பிச் செல்லுங்கள். நானும் உங்களுடனேயே புறப்பட்டு வந்து பெருவழுதிப் பாண்டியரைப் பார்த் திட வேண்டும் என்னும் பேராவல்தான் எனக்கும்; ஆனால், தாமரை காணாமற் போயுள்ள இக்கட்டான நிலையில் சிலமுக்கியமான நடவடிக் கைகளையெல்லாம் முனைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் பாண்டிய நாட்டுத் தலைநகர் சென்றதும் மன்னனின் உடல்நலம் பற்றி உடனுக்குடன் மடல் விடுத்திட வேண்டும், மறந்திட மாட்டீர்களே?' என்று கரிகாலன் கேட்டான். 'இல்லை, அரசே! கண்டிப்பாக அடிக்கடி மடல் விடுக்கிறேன். ஆமாம். காரிக்கண்ணனார் அவர்களும் எங்களுடனேயே புறப்படு கிறார் அல்லவா?" என்று வினவினான் நெடுமாறன். "அவரும் உடனே வந்திட வேண்டியதுதான். ஆனால் நீங்களும், உங்கள் மறவர்களும் கிளம்பி விடுங்கள்; அவரும் செழியனும் அடுத்து வந்துவிடுவார்கள்." நெடுமாறன் விடைபெற்றுச் சென்ற பின்னர், கரிகாலன் காரிக்கண்ண னாரை நோக்கினான். "நான் ஏன் பாண்டியத் தளபதியை முதலில் கிளம்பி விடுமாறு பகர்ந்தேன் தெரியுமா, புலவர் அவர்களே இந்த மடலினைப் பொறுத்துச் சில அந்தரங்கச் செய்திகளை யெல்லாம் தங்களிடம் சொல்லி அனுப்பிட வேண்டியுள்ளது."