460
கலைஞர் மு. கருணாநிதி
460 கலைஞர் மு. கருணாநிதி "ஏன்? மடலிலே மன்னரின் உடல்நிலை பற்றிய செய்தி வேறு ஏதேனும் இடம் பெற்றுள்ளதா?" 'அங்ஙனம் இடம் பெற்றிடாததுதான் என்னைப் பல வகையான சிந்தனைகளுக்கு இலக்காக்கியுள்ளது. புலவர் அவர்களே! நெடுமாறன் இங்கே வந்து நுழைந்திடும் பொழுது ரோமாபுரியிலிருந்து தூதுவர் ஒருவர் வந்திருப்பதாகக் கூறியதைக் கேட்டீர்கள் அல்லவா?" ஆம், அரசே? 'ஆனால், அதைப் பற்றிய குறிப்பே இந்த மடலினில் இல்லை. பெருவழுதி அவர்களே தம் கைப்பட இதனை வரைந்திருந்தால், அந்த இன்றியமையாத செய்தியினைக் கண்டிப்பாகத் தெரிவித்தே இருப்பார். ஆட்சித் துறைத் தலைவர்களுள் ஒருவரான 'திருமுகம் எழுதுவோ'ருக்கு அயல்நாட்டுத் தூதுவர் ஒருவர் நம்நாட்டுக்கு வந்துள்ள நிகழ்ச்சியின் அருமை புரியாதிருக்கலாம். அல்லது சோழ நாட்டுக்கோ, சேர நாட்டுக்கோ அதனைப்பற்றித் தெரிவித்தல் கூடாதென்று தவறாகவும் அவர் கருதியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, ரோமாபுரி மாமன்னர் தூதுவரை அனுப்பியுள்ளமை, பாண்டிய நாட்டுக்கு மட்டுமே கிட்டிய பெருமையாக நான் கருதிடவில்லை. சேர, சோழ, பாண்டியர் ஆளும் முப்பெரு நாடுகளும் அடங்கிய தமிழ்நாடு முழுமைக்குமே கிட்டிய பெருமையாகவே எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். நானே, ரோமாபுரிக்கு ஒரு தூதுவரைத் தமிழகத்தின் சார்பில் அனுப்பி வைத்திட எண்ணிக் கொண்டிருந்தேன். ஏனோ, இருங்கோவேள் தந்திட்ட தொல்லைகளாலும், வேறு சில சிக்கல்களினாலும் என் எண்ணத்தினைச் செயற்படுத்திட இயலாது போயிற்று. இப்போது அந்த முதல் வாய்ப்பு, பாண்டிய நாட்டினுக்கு வந்துள்ளது. அதனைச் சரியாக அவர்கள் பயன் படுத்திட வேண்டுமே என்பதுதான் எனக்கு இப்போது கவலையாக உள்ளது. ஏன் தெரியுமா?" “ஏன் அரசே?” "பாண்டிய நாட்டிலிருந்து ரோமாபுரிக்குச் சென்றிடக் கூடிய தூதுவர், அரசியல் அறிவு மிக்கவராக இருந்தால் மட்டும் போதாது! நம்முடைய பழம் பெருமையினையெல்லாம் நன்கு பறைசாற்றிடவல்ல நாநயமும் கூர்மதியும் கொண்டவராக இருத்தல் வேண்டும். கிரேக்கப் பேரரசர் அலெக்சாந்தர் வடபுலத்தின்மீது படையெடுத்து வந்ததாலோ என்னவோ, மேனாட்டினர் வடநாட்டினை அறிந்து கொண்ட அள வுக்குத் தென்னகத்தினைப் பற்றி அறிந்திடவில்லையோ என எண்ணும்படியாக இருக்கிறது. இப்போது இங்கிருந்து செல்கிற தூதுவர், இந்நாவலந்தீவின் தொன்மையான வரலாறு தெற்கிலிருந்துதான்