பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

461


ரோமாபுரிப் பாண்டியன் 461 தொடங்குகிறதே அன்றி, வடக்கிலிருந்து அல்ல என்பதனைத் தெளிவு படுத்தினால்தானே அவர்கள் முறையாக நம்மைப்பற்றித் தெரிந்து கொள்ள முடியும்?" "தாங்கள் மொழிவது சரிதான் மன்னவா! பஃறுளியாறு பாய்ந்திட்ட நிலக்கோளத்தின் நடுப்பகுதிதானே முதன் முதலாக மனிதர்கள் தோன்றிய இடம்! அந்த மனிதர்களும் நம்முடைய முன்னோர்களான திராவிட இனத்தவர்தாமே! அவர்கள் பேசிய திராவிடத் தமிழ்தானே இன்றுள்ள 'செந்தமிழ்' ஆகச் செப்பம் பெற்றுச் சிறந்து விளங்குகிறது! நடுஆசிய மொழிக் கூட்டமான 'சிதியன்குடி'யினைவிட நம் செந்தமிழ் தனித் தன்மை வாய்ந்தது-கனிச்சுவை மலிந்தது என்பதனை நாம் உருவான வகையில் எடுத்துரைத்தால்தானே வெளி நாட்டினர் நம்மைப் பற்றிய உண்மைகளை நன்றாக விளங்கிக் கொள்ள இயலும்! ஆகவே, ரோமா புரிக்குச் சென்றிடும் பாண்டிய நாட்டுத் தூதுவர் தாங்கள் பகர்ந்த தைப்போல வெறும் அரசியல் அறிவுபடைத்தவராக இருந்தால் மட்டும் போதாதுதான்! வரலாற்று அறிவினில் வல்லுநராகவும், மொழிப்புலமை யில் முதிர்ச்சியுடையவராகவும்கூட இருந்திடத்தான் வேண்டும். அது மட்டுமா? அறிவிலும் ஆற்றலிலும் எத்துணைதான் நிறைந்து நின்றிட்ட போதிலும், நம்முடைய மொழி-இன-நாட்டு நலன்களில் உள்ளார்ந்த பற்று, நம்பிக்கை, அக்கறை அனைத்தும் இல்லாதவராக இருந்திட்டால் அத்தகைய தூதுவரால் நமக்கு எந்தவிதப் பயனுமே ஏற்படாது. <4 "அதனால்தான் புலவர் அவர்களே, எல்லாவற்றிற்கும் பொருத்த மான ஒருவரைப் பெருவழுதிப் பாண்டியர் மிகுந்த எச்சரிக்கையோடு தேர்ந்தெடுக்கும் வண்ணம் தாங்கள் முன்னின்று அவருக்கு ஆய்வுரை வழங்கிட வேண்டுமென்று நான் விழைந்தேன். ஆமாம்! தாங்கள் அறிந்த அளவிலே பாண்டிய நாட்டவருள் யாரைத் தகுதி மிக்கவராகக் கருதுகிறீர்கள்?" 1 "எனக்கென்னவோ, இளவரசர் இளம்பெருவழுதியே எல்லாவற் றுக்கும் பொருத்தமானவராகப் புலப்படுகிறார். ஆனால், பெருவழுதிப் பாண்டியர் வேறு யாரை எண்ணிக் கொண்டிருக்கிறாரோ?" $ "எனக்கும், இளம்பெருவழுதி சிறந்த தூதுவராகத் திகழத் தக்கவர் என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் தாமரையின் மீதுள்ள மயக்கத்தில் எங்கே அலைந்து கொண்டிருப்பாரோ தெரியவில்லை?" "ஆம் மன்னவா! அதுதான் எனக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. எவ்வாறாயினும் பாண்டிய வேந்தரை நம் இருவருடைய கருத்தினுக்கும் இசையுமாறு செய்திடலாம் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்புறம் இன்னொரு வேண்டுகோள், அரசே!