பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

465


ரோமாபுரிப் பாண்டியன் 465 அண்ணா?... இது என்ன ஊர், அண்ணா?' என்றெல்லாம் செழியனை நச்சரிக்கத் தொடங்கி விட்டாள் அவள். அவனும் சளைக்காமல் அவள் வினவியவற்றுக்கெல்லாம் விடையளித்துக் கொண்டே வந்தான். தன் சொந்த மண்ணிடம் உண்மையான பற்றுக் கொண்ட எவனுக்கும் அதன் வற்றாத வளத்தினையும் வரையில்லாப் பெருமையினையும் பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பூரிப்பதில் சலிப்பா ஏற்படும்? பறம்பு மலையினைக் கடந்து சென்றிடும் பொழுது முத்துநகை செழியனை நோக்கிச் சொன்னாள்: 'சோழநாட்டினை வறுமையில்லா நாடு என்று சொல்லிப் பெருமிதப்படுவோம் நாங்கள். ஆனால், இங்கே வந்த பின்னரோ அதற்கும் ஒரு வகையில் வறுமையுண்டு என்பதனை நான் உணர்கின்றேன்.' எதனை வைத்து அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டான் செழியன். உறையூரையொட்டிய மிகச் சிறிய பகுதிகளைத் தவிர இந்தப் பாண்டிய நாட்டினைப் போல் மிகப் பெரிய மலைவளம் சோழநாட்டுக்கு இல்லை அல்லவா?" "நீ புகல்வதும் உண்மைதான். ஆனால் சேரநாடு இதனைவிட மலைவளம் மிகுந்தது." 11 "அப்படியா? எனக்குத் தெரியாது; நான் அங்கே போனதே இல்லை. இந்தப் பாண்டிய நாட்டுக்கும், விவரம் புரிந்த பின்னர் இப்பொழுதுதானே முதன் முறையாக வருகிறேன்!' "ஆமாம், செழியா! முத்துநகை பிறந்து ஓராண்டு முடியுந்தறுவாயில் இவள் அன்னையையும், இவளையும் அழைத்துக் கொண்டு ஒரு முறை மதுரைக்கு வந்திருக்கிறேன். அதன் பின்னர் நான்தான் அடிக்கடி இங்கே வருவதுண்டேயன்றி, இவள் அன்னையையோ, இவளையோ அழைத்து வந்ததில்லை" என்று இடைமறித்துக் கூறினார் காரிக்கண்ணனார். "ஆமாம், புலவர் அவர்களே! எங்கள் மன்னருக்குப் 'பஞ்சவர்' என்னும் பெயரும் உண்டு என்பது தங்களுக்குத் தெரியுமா?" - செழியன் இவ்வாறு கேட்டதும் காரிக்கண்ணனார் மெல்ல நகைத்திட்டார். "எனக்கா தெரியாது? குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களையும் கொண்ட நாட்டினை ஆள்வதாலேயே பாண்டிய மன்னனுக்குப் 'பஞ்சவன்' என்னும் பெயர் உண்டாயிற்று.