பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472

கலைஞர் மு. கருணாநிதி


472 கலைஞர் மு.கருணாநிதி கள்ளுண்ட களிப்பினில் மிதந்த அவர்கள் கற்பனையால் உரையாடுவதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது செழியனுக்கு. "என்ன புலவர் அவர்களே! அவர்கள் உளறிச் செல்வதைக் கேட்டீர்களா?" என்று தேரினை ஓட்டியவாறே காரிக்கண்ணனாரைத் திரும்பிப் பார்த்திட்டான் அவன். "கேட்டேன்; கேட்டேன், ஆனால் அவர்கள் உளறலிலும் ஓர் உண்மை ஒளிந்து கிடக்கிறது" என்றார் புலவர். “என்னப்பா அது?" என்று ஆர்வம் ததும்பக் கேட்டாள் முத்துநகை. "ரோமாபுரிக்குத் தூதுவராகச் சென்றிடும் ஆசை, தளபதி நெடுமாறருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது தான் அந்த உண்மை. அத்துடன் இன்னொரு ஆறுதல் தரக்கூடிய காட்சியினையும் நான் காண்கிறேன்.' 'ஆறுதல் தரக்கூடிய காட்சியா?" என்று வியப்புடன் கேட்டான் செழியன். ஆம் செழியா! நாம் கவலையுற்று வருந்திய அளவுக்குப் பெருவழுதிப் பாண்டியரின் உடல்நலம் அவ்வளவு கடுமையாக நலிவடைந்திடவில்லை; சற்றுத் தேறியும் இருப்பார் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால், மதுரை மாநகரினை இந்நேரம் துயர இருள் கவ்வியிருக்காதா? இத்துணை ஆரவாரமாக, ஆடம்பரமாக மக்கள் இயங்கிடுவதைத்தான் நாம் கண்டிட முடிந்திருக்குமா?" "தாங்கள் மொழிவது சரிதான் புலவர் அவர்களே! என் மனத்திற்கும் மன்னர் நலம் பெற்றிருப்பார் என்றே படுகிறது" என்றவாறே செழியன் தேர்ப்புரவிகளை மேலும் முடுக்கிவிட்டான்.