ரோமாபுரிப் பாண்டியன்
477
ரோமாபுரிப் பாண்டியன் 477 ஆத்திரம் ஏற்பட்டு அவனை ஒதுக்கி விட்டேனானால் தன்னைத் தவிர வேறு தகுதியான ஆளே இந்தத் தென்பாண்டிச் சீமையிலே இல்லை என்கின்ற தன்னம்பிக்கை; நப்பாசை." யாருக்கு?" என்று வியப்புடன் வினவினார் காரிக்கண்ணனார். “எல்லாம் நம் தளபதி நெடுமாறனுக்குத்தான்!” அப்படியா! வருகிற வழியில், கள்-அங்காடிக்கு அருகே இரு குடிகாரர்கள் பேசிக்கொண்டு போனது சரிதான் போல இருக்கிறது' நெடுமாறருக்கு இத்தனை உள் எண்ணங்கள் இருந்திடக்கூடும் என்று என்னால் கற்பனை கூடச் செய்திட முடியவில்லையே! படைத்தளபதி என்கிற ஒன்றைத் தவிர அப்படி என்னதான் அவருக்குத் தனித்திறமை இருக்கிறது. நம் இளவரசரை விட?' "இளம்பெருவழுதியே கிடக்கட்டும், புலவர் அவர்களே! ரோமாபுரி நாட்டுக்குச் செல்லும் பாண்டிய நாட்டுத் தூதுவர் என்றால் அது என்ன சாதாரணப் பொறுப்பா? அதற்கு ஒருவரை 'தேர்வு' செய்கிறோம் என்றால் எவ்வளவு விழிப்போடு நாம் இருந்திட வேண்டும். நெடுநெடுவென்று வளர்ந்திருந்தாலோ அல்லது அடியாட்களை வைத்து மிரட்டும் ஆணவம் இருந்தால் மட்டும் போதுமா?" "அந்தப் பொறுப்பான பதவிக்கு ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்றால், அவர் நல்லவரா, வல்லவரா? எல்லாருடனும் இணைந்து பழகிடும் இனிய இயல்புகள் உள்ளவரா, நம்பிக்கைக்கு உரியவரா, வம்பு வழக்குகளுக்குப் போகாதவரா, நாணயம் கொண்டவரா, பிறநாட்டுத் தலைவர்களைக் கவரும் அளவுக்கு நாநயமும் பூண்டவரா, பகுத்தறிவு நிறைந்தவரா, பண்பாட்டில் சிறந்தவரா, தரணியெல்லாம் வியந்திடும் வண்ணம் தமிழைப் பரப்புகின்றவரா, இல்லை-தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழைப் பழித்துக் கொண்டே தன் வயிற்றை மட்டும் நிரப்புகின்றவரா, அல்லலுறும் மக்களுக்காக அயராது உழைப்பவரா, ல்லை - செல்வர்களின் அரவணைப்பில் செழிப்பாக வளர்ந்து கொண்டே 'ஏழைகளின் தோழன்' எனப் போலி வாழ்க்கை வாழ்பவரா. தாய் நாட்டைக் காப்பவரா, தன்மானந் தழைப்பவரா, பரந்த அறிவு பெற்ற -பல கலைகளிலும் வல்லுநரா என்றெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்தித்திட வேண்டாமா?" "தாங்கள் புகல்வது சரிதான் அரசே! ஆனால் இத்துணைத் தகுதிகளையும் படைத்தவராகத் தாங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார் காரிக்கண்ணனார். 44 'அவர் யார் என்று சொன்னால் தாங்கள் நம்பக்கூட மாட்டீர்கள். சொல்லட்டுமா?" என்று சிரித்திட்டான் பெருவழுதிப் பாண்டியன்.