ரோமாபுரிப் பாண்டியன்
481
ரோமாபுரிப் பாண்டியன் 481 வழக்கினைத் தொடுக்கிறோம். தாங்கள் பிணியுற்ற நிலையில், இரவுப் பொழுதாயிற்றே என்றும் பாராமல், அடியேன் தொல்லை கொடுத்திட்ட போதும் தாங்கள் பொறுமையோடு என் உரைகளையெல்லாம் செவிமடுத்தீர்கள். அதற்காக மீண்டும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நவின்றுவிட்டுச் சமணத் துறவியும் கூடத்தினை விட்டு அகன்றார். 2 "சோழ நாட்டிலிருந்து நீண்ட பயணம் வந்த உடல் அலுப்புக்கூடத் தீர்ந்திடாத நிலையில் மீண்டும் படைப் பணியினை மேற்கொள்வது செழியனுக்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும்! அல்லவா?" என்று பரிவுடன் பகர்ந்திடலானார் காரிக்கண்ணனார். அதற்குப் பெருவழுதிப் பாண்டியன், "என்னசெய்வது புலவர் அவர்களே! செழியனைப் போலப் பொறுப்போடு, உண்மையோடு உழைக்கக் கூடியவர்களை - திறமையோடு செயலாற்றக் கூடியவர்களை -நாம் எங்கே காண முடிகிறது? அதுவும் சமயப் பூசல்களுக்குத் தீர்வு காண்பது இருக்கிறதே? அது மிகுந்த கடினமான வேலை. மிகமிக எச்சரிக்கையோடு ஈடுபட வேண்டும். தனிப்பட்ட முறையிலே எனக்கென்று சில அசைக்க முடியாத-அறிவுக்கு இசைந்த- அடிப்படை யான கொள்கைகள் இருந்திட்ட போதிலும் நம்முடைய அரசினைப் பொறுத்தவரையில் எல்லாச் சமயங்களுமே நமக்கு இணையானவை தான். ஒன்றைத் தாக்குவதோ இன்னொன்றைத் தூக்குவதோ நம்முடைய தொழில் இல்லை. இந்த நடுவு நிலைமை யினின்றும் நாம் கடுகளவு பிறழ்ந்திட்டாலும், நம் வளர்ச்சியினைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டிடுவோர் புழுதியினை வாரிப் பொலபொல வென்று தூற்றிட மாட்டார்களா? அதனால்தான் பொறுப்புணர்ந்து நடந்திடக்கூடிய செழியனைப் போன்றவர்களின் தோள்களின் மீதே தொல்லை மிகுந்த பணிகளையெல்லாம் அடிக்கடி சுமத்திட வேண்டியுள்ளது..." என்று பெருவழுதிப் பாண்டியன் புகன்றிடும் பொழுதே இளம்பெருவழுதி வந்துவிட்டான். பிணியினால் நலிவுற்று மெலிந்து களைத்துக் காணப்பெற்ற தன் தந்தையினைக் கண்டதும் இளவரசனின் இதயக் குருத்தினைத் துயரம் துளைத்திட்டது, சுளுக்கியைப் போல! காரிக்கண்ணனார் குரல் எழுப்பினார்; "இளவரசருந்தான் வந்துவிட்டார்; இனி நமக்குக் கவலை இல்லை. அப்புறம் இங்கு வருவதற்காகக் கிளம்பு முன், கரிகாற் சோழர் ஓர் இன்றி யமையாத கருத்தினைத் தங்களிடம் எடுத்துரைக்குமாறு கூறினார்... "எதைப்பற்றி?" என்று வினவினான் பெருவழுதி.