பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

கலைஞர் மு. கருணாநிதி


482 கலைஞர் மு. கருணாநிதி "ரோமாபுரிக்குத் தூதுவராக யாரை அனுப்பினால் பாண்டிய நாட்டினுக்கு மட்டுமின்றி முத்தமிழ் வேந்தர்கள் ஆண்டிடும் தமிழகம் முழுமைக்குமே நலம் பயக்கும் என்பதைப் பற்றித்தான்!” அப்படியா?..ம். அதைப்பற்றி நாம் அப்புறம் பேசிக் கொள் வோமே!" பெருவழுதி இங்ஙனம் மொழிந்திடுவான் என்று காரிக்கண்ணனார் எதிர்பார்த்திடவில்லை. 'தம்முடைய தனயனுக்கு முன்கூட்டியே அது பற்றித் தெரிந்திட வேண்டாம் என்று நினைத்திருப்பாரோ? அல்லது நெடுநேரம் உரையாடிக் கொண்டே இருந்துவிட்டதால் ஏற்பட்ட களைப்பினால்தான் அவ்வாறு புகன்றிருப்பாரோ?' என்றெல்லாம் குழம்பிடலானார் புலவர்.