பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

487


ரோமாபுரிப் பாண்டியன் 487 "பெருமதிப்பிற்குரிய அறங்கூறு அவையப் பெரியோர்களே! மற்றவர்களை வியப்பினில் ஆழ்த்திடவோ வீண்பழி சுமத்திடவோ நான் ஏதோ கற்பனைச் சரடு விடுவதாகக் கருதிட வேண்டாம். என்னுடைய ஒவ்வொரு வாதத்திற்குமே அசைத்திட முடியாத ஆதாரம் உண்டு; ஆதாரம் இல்லையென்றால் நான் வாதிடவே மாட்டேன், அதுவும் மூதறிஞர் கனகநந்தி அவர்களிடம் எனக்குப் பெருமதிப்பே உண்டு. ஆனால் ஒரு மூதறிஞரிடமோ, ஒரு பெருந்தலைவரிடமோ மதிப்பு வைக்கிறோம் என்றால், அதற்காக அவர்களுடைய முரண்பட்ட மொழிகளுக்கும் அறம் பிறழ்ந்த செயல்களுக்கும் நாம் எப்பொழுதுமே தலையாட்டிக் கொண்டே இருந்திட வேண்டுமா? காலப் போக்கிற்கு ஒவ்வாத அவர்களுடைய தவறான பாட்டுகளுக்கே தாளம்போட்டு வாழ்ந்திட வேண்டுமா? அவ்வாறு தலையாட்டிடவில்லை-தாளம் போட்டிடவில்லை என்பதற்காகத்தான் எங்களுடைய பழைய நட்பினை மறந்து நன்றியினையும் கொன்று. மூதறிஞர் கனகநந்தி அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எங்கோ திசைமாறிச் செல்கிறார்கள்? எங்கள்மீது வசை மாரியும் பொழிகின்றார்கள். இங்கே சமணத் துறவியார் எத்துணையோ அவதூறுகளையெல்லாம் ஏராளமாக அள்ளி வீசினார். அவரைப்போல, ஒருவர் மீது குற்றங்கூறுவதும் எளிது; ஊழல் புகார்கள் பலவற்றினை உலவிடச் செய்வதும் எளிது. ஆனால் மற்றவர்களைப் பற்றி "ஊழல் ஊழல்" என்று உரக்கக் கூவிடுமுன் தாமும் தங்களைச் சார்ந்தவர்களும் அத்தகைய ஊழல்களுக்கும் - குற்றங்களுக்கும்-அப்பாற்பட்டவர்களா என்பதனை யும் ஒரு கணம் எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தன்னுடைய வேட்டியிலே கையகலத்திற்கு மேல் உள்ள கறையினை வைத்துக் கொண்டு மற்றவர்கள் துண்டிலே உள்ள ஒரு சிறு புள்ளியை பெரிது படுத்திப் பேசுவதா? இதனால் எங்களைப் பற்றிக் குறையே கூறக்கூடா தென்று நான் வாதிடவில்லை. எங்களிடம் தவறுகள் இருந்தால் - அவை தக்க சான்றுகளோடு மெய்ப்பிக்கப்பட்டால் - அவற்றைத் தவிர்த்திடவும் திருத்திக் கொள்ளவும் நாங்கள் என்றைக்குமே தயங்கியதில்லை. அதற்காக ஒருவர் மீது வீண்பழி சுமத்துவதற்கும் ஒரு வரம்பு இல்லையா? சரி; ஒருவன் மீது ஊழல் புகார் என்னும் வாளினைப் பாய்ச்சிடும் பொழுது, அந்த வீரன் தன் கரத்திலிருக்கும் கேடயத்தினால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முற்படுவது எப்படித் தவறாகும்? அவன் எழுப்பிடுகின்ற எதிர் குற்றச்சாட்டுதான் அவனது கரத்திலுள்ள கேடயம்! அந்தக் கேடயத்தைக் கண்டதுமே -எதிர்க் குற்றச்சாட்டு பாய்ந்து வந்ததுமே நமது சமண நண்பர்கள் இடிந்து போவானேன்? எரிச்சலைக் கக்குவானேன்? முதலில் அவர்கள் தங்கள் சமணக் கோவிலிலே சிதறிக்