பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

489


ரோமாபுரிப் பாண்டியன் 489 இதுதான் மாடு என்பது...' என்று சொல்லிக் கொடுத்திடும் முதல் பாடத் தினையே எத்தனை காலத்திற்குத்தான் உருப்போட்டுக் கொண்டிருப் பது? மேலும் உருவ வழிபாடு என்பது 'வேறோர்' சமயத்திற்குத்தான் உரிமையுடையது. அந்த வேறோர் சமயத்தின் கோட்பாடுகளை முறியடித்திட முளைத்ததுதானே சமண சமயம்! நான் அறிந்த அளவிலே, விருடபதேவர் முதல் மகாவீரர் வரை சமணத் தீர்த்தங்கரர்கள் உருவ வழிபாட்டினை வரவேற்றிடவில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்த நிலையில் இன்றையச் சமணர்கள் தங்களுடைய பண்டைய வழிகாட்டிகளின் பாதையினைவிட்டுத் தடம் புரண்டிடும் பொழுது மற்றவர்கள் மறுப்புக் கணையினைத் தொடுப்பது இயற்கை தானே? அந்த மறுப்பு சில வேளைகளில் 'கேலி, கிண்டல்' வடிவத்திலும் வருகின்றது. அவர்கள் மட்டும் எங்கள் பௌத்த சமயத்தினைக் கேலி செய்ததில்லையா?" இப்போது சமணத் துறவி மீண்டும் எழுந்தார். விரிவாக "எங்களுடைய வழிபாட்டைப்பற்றி இவ்வளவு அலசுகிறீர்களே. நீங்கள் மட்டும் கவுதமபுத்தரை எதற்காக வழிபடுகிறீர் கள்? அந்த வழிபாடுகளெல்லாம் ஒழுங்கு முறையோடு தான் நடக்கின்றனவா?" ய சமணத் துறவியாரின் இந்த வினா, அவர் இன்னும் எங்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது. நாங்களும் புத்தரை வழிபடுகிறோம்; இல்லையென்று சொல்லிவிட வில்லை; ஆனால் எந்த ஒரு பௌத்தனாகட்டும் அவனுடைய வழிபாட்டு முறைகளிலே தான் விரும்பியவற்றையெல்லாம் அடைந்திட விழைகின்ற விண்ணப்ப இயல்பு இருக்கவே இருக்காது. அவன் புரிகின்ற வழிபாடுகளெல்லாம் தன்னைத் 'தம்மபத விளக்கொளி கொண்டு நன்னெறிப் படுத்திய கவுதம புத்தருக்கு நன்றி தெரிவித்திடும் முறை யினில் அமைந்திட்ட வழிபாடுகளே அன்றி வேறல்ல. உண்மையிலேயே மற்ற சமயவாதிகளை விட முதிர்ச்சியுற்றவன் பெளத்தன் ஒருவனே! ஏனெனில், மற்றவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் இறைவனிடம் சென்று, 'அது வேண்டும்: இது வேண்டும்'. என்று குழந்தைகளைப் போலக் கெஞ்சுகிறார்கள். பௌத்தன் அப்படியெல்லாம் கெஞ்சமாட்டான். அவன் ஒருவன் தான் எதனையுமே இச்சிக்காமல் எதற்குமே கவலைப்பட்டிடாமல் - பகுத்தறிவு ஒன்றினையே வழித் துணையாகக் கொண்டு உண்மையை நாடிச் செல்கிறான். 4 "பௌத்த வழிபாட்டின் இந்த அடிப்படையினைப்புரிந்து கொள்ளா மல் யாராவது புத்தரை வணங்குவதில் ஈடுபட்டார் களானாலும் அவர்களும் சரியான பாதையினில் நடைபோடவில்லை என்றே