ரோமாபுரிப் பாண்டியன்
493
ரோமாபுரிப் பாண்டியன் "என்ன சிக்கல் அது?' 493 "ஒரு நாள் நள்ளிரவு நாலைந்து பேர் ஒரு பெண்ணோடு கனகநந்தி முனிவரிடம் வந்திருக்கிறார்கள். தங்களை யாரோ கொல்வதற்கு வருவத பாகவும் தங்களுக்குப் புகலிடம் தர வேண்டும் என்றும் கேட்டிருக்கி றார்கள். இவ்வாறு அடைக்கலம் தேடி வருகின்றவர்களைச் சமணக் கோவிலை ஒட்டியுள்ள 'அஞ்சினான் புகலிடம்' என்னும் பகுதியில் தங்கிடச் செய்து காப்பாற்ற வேண்டியது சமணர்களின் கடமை. அந்தக் கடமையினை நிறைவேற்றிடும் முறையில்தான் அந்தப் பெண்ணுக்குப் புகலிடம் அளித்தார் கனகநந்தி. ஆனால் அந்தச் செயலையே தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அவர்மீது களங்கம் கற்பிக்க முற்பட்டு விட்டனர் பௌத்தர்கள்.' அது சரி, அந்தப் பெண் இன்னும் கனகநந்தி முனிவரின் பாதுகாப்பில்தான் இருக்கிறாளா?" - என்று வினவினார் அறங்கூறு அவையத்தலைவர். இல்லை என்று கனகநந்தி முனிவர் நான் உசாவிய பொழுது மறுத்து விட்டார்" என்றான் செழியன். "அப்படியா? அந்தக் கனகநந்தி முனிவர் இப்போது இங்கே வந்திருக்கிறாரா?" இதோ வந்திருக்கிறேன். என்று எழுந்து நின்றார் கனகநந்தி முனிவர் ஆமாம். நீங்கள் ஒரு பெண்ணுக்குப் புகலிடம் அளித்தது உண்மையா?" உண்மைதான்". "அவள் இப்போது உங்களுடைய 'அஞ்சினான் புகலிடத்தில் தான் தங்கியிருக்கிறாளா?" "இல்லை, அவளும் அவளோடு வந்த ஆடவர்களும் அன்று விடிவதற்குள்ளேயே தப்பிவிட்டார்கள்." "சமணத் தலைவர் பொய் சொல்கிறார்! சமணத் தலைவர் பொய் சொல்கிறார்! என்று பௌத்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திட முனைந்திட்ட அறங்கூறு தலைவர், "இப்படியெல்லாம் நீங்கள் கூச்சல் போடுவது முறையில்லை. கனகநந்தி முனிவர் கழறுவது பொய்தான் என்றால் அதற்குரிய நடவடிக்கை யிலிருந்து அவர் தப்பிவிட முடியாது. அந்தப் பெண் இன்னும்