பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

கலைஞர் மு. கருணாநிதி


நண்பகல் உணவினை அருந்திவிட்டுப் பெருவழுதிப் பாண்டியனைக் காணச்சென்றார் காரிக்கண்ணனார். அவருடன் முத்துநகையும் போனாள். அவர்களுடைய உரையாடல் எடுத்த எடுப்பிலேயே செழியனைப் பற்றியே திரும்பியது. "ஆமாம். செழியன் இன்று சாட்சியம் அளித்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று பாண்டிய வேந்தன் ஆர்வத்துடன் கேட்டான். 'மிகமிக அருமையாக அமைந்திருந்தது அரசே! அவரை வெறும் மறவர் என்றுதான் இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்; இந்த அளவுக்கு வரலாற்று அறிவும், சமய ஆராய்ச்சியும், வாதிடும் ஆற்றலும், எல்லாவற்றையும் விட நடுவு நிலைமை பிறழாத நல்ல பண்பாடும் அவரிடம் அமைந்திருக்கும் என்று நான் நினைத்திடவே இல்லை!'என்று தம் வியப்பினை வெளியிட்டார் புலவர். $ "ஆமாம் அரசே! இவ்வளவு தெளிவாக - இனிமையாக -கம்பீரமாக. அவை நடுவே அண்ணா முழக்கமிடுவார் என்று நானும் எதிர்பார்க்கவே இல்லை" என்று முத்துநகையும் உவகை மேலிட உரைத்தாள். ஆமாம்; நாம் ரோமாபுரிக்குத் தூதுவர் அனுப்புவது பற்றிக் கரிகாற்சோழர் ஏதோ கருத்தினைத் தெரிவித்ததாகக் கூற வந்தீர்கள் அல்லவா?" "ஆம், மன்னவா! அவர் தங்களுடைய மகன் இளம்பெருவழுதியை அனுப்புவதே சாலச் சிறந்தது என்று...." "அப்படியா....ஆனால் நான் அவனை அனுப்பப் போவதில்லை. செழியனைத்தான் அந்தப் பொறுப்பான பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். பாண்டிய மன்னன் இவ்வாறு பகர்ந்திடவும், "அது தான் சரியான முடிவு! பொருத்தமான ஆள் என் அண்ணா தான்! ஆம். என்னுடைய அண்ணாவேதான்! என்று களிப்பினில் மிதந்து உரக்கவே மொழிந் திட்டாள் முத்துநகை.