பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

499


ரோமாபுரிப் பாண்டியன் 499 வரவேற்கத்தக்க முயற்சியே! அதுவும் கொற்கை போன்ற புகழ் மிக்க துறைமுகப் பட்டினங்கள்-நகர்கள்- முதலானவை நம் இளவரசர் போன்ற திறமைசாலிகளின் தனி நிருவாகத்தினில் இருந்திட்டால்தான் வெளிநாட் டினர் பலர் இங்கே வந்திடவும், நமது மண்ணின் வளத்தைக் கண்டு வியந் திடவும். வாணிகத் தொடர்புகள் மேலும் வளர்ந்திடவும் வாய்ப்புகள் ஏற்படும்." "இப்போதாவது புரிகிறதா புலவர் அவர்களே, நான் இளம்பெரு வழுதியை ரோமாபுரிக்கு அனுப்ப விரும்பிடாததற்கான காரணம்? மேலும் செழியன் இருக்கிறானே, அவன் ஒரு திறமைச் சுரங்கம் சிந்தனைச் சுடர்! அதனால்தான் அந்தப் பொறுப்பான பதவிக்கு ஆள் அவனே என்று திடமாகத் தோன்றியது; அவனையே தேர்ந்தெடுத்தேன்." "தங்களுடைய முடிவு முற்றிலும் சரியானதே என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மன்னவா! தக்கவாறு எடுத்துரைத்தால் கரிகாலரும் ஒப்புக்கொள்ளாமல் போக மாட்டார்" காரிக்கண்ணனார் இவ்வாறு இயம்பிடவும் அதுகாறும் அவர்கள் இருவருடைய உரையாடலையும் பொறுமையோடு கவனித்துக் கொண்டிருந்த முத்துநகை மீண்டும் தன் குரலை எழுப்பினாள்: “நீங்கள் என்னப்பா, செழியன்தான் ரோமாபுரிக்குப் போகிறார் என்று அறிந்தவுடனேயே, சோழப் பேரரசர் இரட்டிப்பு மகிழ்ச்சியினை எய்திடமாட்டாரா? செழியன் அண்ணாவின் அறிவிலும் ஆற்றலிலும் அவருக்கு எத்துணை நம்பிக்கை - நன்மதிப்பு உண்டு என்பதனை நானல் லவா அறிந்திடுவேன்!' என்றெல்லாம் அவள் புகலப் புகல, அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் தமக்கே சூட்டப்பெற்ற மகுடமாக எண்ணிய பூரிப்பில் மிதந்திட்டார் பெருவழுதிப் பாண்டியர். அறங்கூறு அவையத்திலிருந்து புறப்பட்ட இளம்பெருவழுதி புரவி மீதேறி நேரே பசுமலைக்குத்தான் சென்றான். அங்கேயுள்ள சமணக் கோவிலையும் அதனை ஒட்டிய 'அஞ்சினான் புகலிடத்'தையும் நோட்டம் விட்டான். எப்படியாவது கனகநந்தி முனிவரால் காப்பாற்றப் பட்ட காரிகை தாமரையாகவே இருந்திடமாட்டாளா? அவளும் அங்கேயே ஒளிந்திருக்கமாட்டாளா? என்கிற ஏக்கம் அவனுக்கு. சில பௌத்தர்கள், சமணர்கள், வைதீகச் சமயத்தினர் எல்லாரிடமும்கூட மெல்ல உசாவிப் பார்த்தான். பகலிலே சரியாகத் துப்புத்துலக்கிட இயலாதென்று இரவிலே மாறுவேடம் பூண்டும் தன் புலனாய்வு வேலை யினில் முனைந்து ஈடுபட்டான். எனினும் தாமரையைப் பற்றி எந்தவிதத் தடயமும் அவனுக்குக் கிட்டவில்லை.