பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

501


ரோமாபுரிப் பாண்டியன் 501 முக்குளித்துப் பழக்குலைப் பாக்களாகப் புதுவடிவம் பெற்றுக் கொண்டிருந்தன. அந்த இனிமையான வேளையில் யாரோ ஒருவருடைய கனைப்பு இளம்பெருவழுதியின் சிந்தனையைக் கலைத்திட்டது. அவன் எழுதுவதை நிறுத்தி நிமிர்ந்து உட்கார்ந்து எதிரே நோக்கினான். அப்போது சோலையினுள் வந்து நுழைந்தவன் வேறு யாரும் அல்லன்; தளபதி நெடுமாறனே. "என்ன இளவரசர் அவர்களே! பாக்கள் புனைவதற்கு அருமையான இடமாகத்தான் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய வருகை, கடிதாகப் பறந்து சென்றிடும் தங்கள் கற்பனைப் புரவிக்குக் கடிவாளம் போட்டு நிறுத்திவிட்டதா?" என்று வேடிக்கையாக கேட்டுக் கொண்டே வந்தான் அவன். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் தாங்கள் எங்கே இங்கே இவ்வளவு தூரம் - அதுவும் தன்னந்தனியாக?” "எல்லாம் தங்களைச் சந்தித்திட வேண்டித்தான். இன்று காலை யிலிருந்து மதுரை மாநகர் முழுவதையுமே அலசிவிட்டேன் ஆட்களைவிட்டு. தங்களைக் கண்டுபிடித்திட முடியவில்லை" “ஏன் அவ்வாறு தேடினீர்கள்? ஏதேனும் முக்கியமான செய்தியா?" "முக்கியமான செய்தி மட்டும் இல்லை; தலையே போகிற சிக்கல்! பாண்டிய மண்டலத்தின் பெருமைக்கே அறைகூவல் விடுத்திடும் பெருஞ்சிக்கல்! என்றவாறே இளம்பெருவழுதிக்கு எதிரே, உழைப்பாளி யின் நரம்பினைப்போல் புடைத்து நீண்டு கிடந்த மரத்தின் இன்னொரு வேரின்மீது அமர்ந்திட்டான் நெடுமாறன். "அப்படியென்ன அவிழ்த்திடவே முடியாத பெருஞ்சிக்கல் தளபதி யாரே? அதுவும் திடீரென்று...' “இது திடீரென்று முளைத்திட்ட சிக்கல் இல்லை; சில நாட்களாகவே நாடு முழுவதும் கனன்று கொண்டிருந்த சிக்கல்தான். இன்று வெடித்து விட்டது. "தாங்கள் எதைப் பற்றிக் கூறுகிறீர்கள் தளபதியாரே?" ரோமாபுரி நாட்டுக்குத் தூதுவர் ஒருவர் சென்றிட வேண்டியுள்ளதே, அதைப் பற்றித்தான்." 12 'ஆமாம், அதிலே என்ன சிக்கல் இருக்கிறது? யாராவது ஒருவரை அனுப்பி வைத்திட வேண்டியது தானே?"