பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

507


ரோமாபுரிப் பாண்டியன் 507 ஆனால், கொற்கையைவிட்டு இளம்பெருவழுதியை ஏன் வெளியே அனுப்பிட இயலாது என்பதனையும், ரோமாபுரியிலே மேற்கொண்டிட வேண்டிய பணிகளைப் பற்றியும் அவன் விளக்கிய பிறகே, உண்மை யாகத்தான் அரசர் உரைக்கின்றார் என்று உணர்ந்து தெளிந்திட்டான் செழியன். - பதவி என்றதுமே பல்லக்கிலே பவனி வந்திட லாம்; பஞ்சணையிலே படுத்துப் புரண்டிடலாம்; இட்ட பணியினைச் செய்திட ஏவியதை முடித்திட எடுபிடிகள் ஏராளமிருப்பர்; எனவே இன்பக் குளத்திலே தன் இச்சைப்படி யெல்லாம் நீச்சலடித்திடலாம் என் றெல்லாம் சிலர் கற்பனைச் சரங்களை அற்புதமாகத் தொடுத்திடக்கூடும்! ஆனால் செழியனைப் பொறுத்தவரை, பதவி என்பது களியாட்ட அரங்கமல்ல; கனி இதழ் அமுதும் அல்ல; கடமையைப் புரிந்திட, நுடமுற்று நலிவார்க்கு ஊன்று கோலாய் உதவிட, கருணையைப் பொழிந்திட, தடங்காணாது அலைவார்க்குத் தக்க வழித்துணையாகிட, அது ஓர் அருமையான வாய்ப்பு; வழி-கருவி-ஏற்பாடு அவ்வளவே! எனினும் இன்னோர் எண்ணம் முகிழ்த்து அவனது இதயக் கருத்தினையே வாட்டி வதைத்திட்டது. அந்த எண்ணம் வேறு எதனைப் பற்றியதும் அல்ல; தாமரையைப் பற்றியதே! இருங்கோவேளின் தங்கையாகப் பிறந்திட்ட போதிலும் அவள் இரும்பு நெஞ்சம் கொண்டவள் அல்லள்; தன்பால் கரும்பு மனம் பூண்டவளே என்பதனை அவளோடு குறுகிய காலமே பழகிட நேர்ந்திட்ட போதிலும், உறுதியாக அவன் உணர்ந்திருந்தான். புகார் அரண்மனையினின்றும் அவள் காணாமற்போய் விட்டாள் என்றதுமே அவளை உடனே தேடிக் கண்டுபிடித்திடவேண்டும் என்று செழியனுடைய உள்ளம் துடியாய்த் துடித்திட்டது. ஆனால், அந்தச் சமயம் பெருவழுதிப்பாண்டியன் உடல்நலம் குன்றிவிட்டதாக வந்த செய்தியும் அதனையொட்டிக் கரிகாலன் விடுத்த கட்டளையும் அவனை அங்கே இங்கே அசைந்திடவிடாமல் மதுரைக்கே கொண்டு வந்து தள்ளின. பாண்டியத் தலைநகரில் நுழைந்ததுமே பசுமலைப் பூசல் அவனைத் தன்பால் ஈர்த்து முழுவேலை வாங்கி விட்டது. அறங்கூறு அவையத்திலே சாட்சியம் கூறியதும் பின்னர் அதன் தொடர்பாகப் புலனாய்ந்திட வேண்டிய கண்டிப்பான கடமையும் தாமரையைப் பொறுத்து எந்த முயற்சியினையும் அவன் மேற்கொண்டிட இயலாதவாறு அவனது கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டன.