பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

515


ரோமாபுரிப் பாண்டியன் 515 லேயே பெருஞ் சூட்டிகையோடு துறுதுறுவென்று விளங்கிய தம்முடைய ஒன்றுவிட்ட பேரப் பிள்ளையாகிய ஆக்டேவியன் பிற்காலத்திலே இணையற்ற வீரராய் இலங்கிடுவார் என்னும் எண்ணம் சீசரின் இதயத்திலே அழுத்தமாகப் பதிந்து விட்டது. அதனால் தான் தம்முடைய வழித்தோன்றலாக - தத்துப் பிள்ளையாக ஆக்டேவியனைப் பற்றி தமது உயிலிலேயே குறிப்பிட்டிருந்தாராம் அவர். அந்தக் குறிப்பு மட்டும் இல்லாமற் போயிருந்தால், கதையே வேறு விதமாக மாறியிருக்கும்." "எப்படி?" "தம்முடைய மனைவி கல்பூர்னியா எவ்வளவோ அச்சத்துடன் தடுத்திட்ட போதிலும், கருவி ஏதுமின்றி வெறுங்கரத்தோடு செனெட் சபையினை நோக்கிச் சென்றிட்ட ஜூலியஸ் சீசரை வஞ்சகமாய் வளைத்துக் கொண்டு கொன்றார்கள் அல்லவா? அந்தச் சதி நாடகத்தின் தலையாய் கதாநாயகர்களான கேசியசோ, புரூட்டசோ அல்லது மாவீரன் மார்க் அந்தோணியோ, லெபிட்சோ அரியணைக்கு உரிமை கொண்டாடி யிருப்பார்கள். அரசர் ஆக்டேவியனே, சீசரின் உயிலைப் பற்றி அறியாமல் போயிருந்தால் தாழ்வு மனம் கொண்டு ஒதுங்கியோ சென்றிருந்தாலும்கூட வியப்படைவதற்கு இல்லை?" "நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஜூலியஸ் சீசருக்குப் பின்னுள்ள ரோமாபுரியின் அரசியல் வரலாற்றிலே அவருடைய உயிலுக்குப் பெரும் பங்கு உண்டு என்று தெரிகிறதே!" "ஆம், தூதுவர் அவர்களே, அந்த உயிலினால் அரசர் ஆக்டேவியன் மட்டும் பலன் பெறவில்லை. ரோம் நகர மக்களும் பெரும்பயன் அடைந்தார்கள்!" "எப்படி?" "டைபர் நதிக்கு அப்பால், தாம் அரும்பாடுபட்டு வெகு தொலைவு வரை செழிப்போடு வளர்த்து வைத்திருந்த அழகான தோட்டங்களை, ஒவ்வொரு ரோம் நகரக் குடி மகனுக்கும் தலைக்கு இவ்வளவு பரப்பளவு என்று உரிமைப்படுத்தி எழுதியிருந்தார் சீசர்!" "வியப்பாக இருக்கிறதே! இணையற்ற மாவீரன் என்று மட்டுமே இதுவரை ஜூலியஸ் சீசரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன்; அவர் தலை சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்திருக்கிறாரே. ஆமாம்; உங்களுடைய அகஸ்டஸ் மன்னர்தானே அந்த ஆக்டேவியன்?" அதிலே சந்தேகம் என்ன? தூதுவர் அவர்களே, இருவரும் ஒருவரேதான்!' என்று சிரித்திட்டான் சிப்பியோ,