516
கலைஞர் மு. கருணாநிதி
516 கலைஞர் மு. கருணாநிதி "அதுசரி; ஆக்டேவியன் என்னும் இயற்பெயரை விட்டுவிட்டு 'அகஸ்டஸ்' என்னும் புதுப்பெயரை ஏன் வைத்துக் கொண்டார்" 61 'அவராக ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை; செனேட் மன்றமும், ரோமானிய மக்களும் சேர்ந்துதான் அந்தப் பட்டத்தை - புதுப் பெயரை அவருக்கு வழங்கினர். ஏன் தெரியுமா? ஜூலியஸ் சீசருக்குப் பின்னர், இந்த மாபெரும் ரோமாபுரிப் பேரரசு துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று எதிரிகள் எதிர்பார்த்தனர்; உள்நாட்டிலும் பலர் பதவி வேட்டையாடிக் கலகம் விளைக்க முற்பட்டனர். அவர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து நாட்டின் பெருமையைக் காத்திட, மக்களுக்கு நல்வழ்வு கிட்டிட, உயிரைப்பணயம் வைத்துப் போராடினார் ஆக்டேவியன். ஆனால், சிறிது காலத்திற்கு முன்னர் செனேட் மன்றத்தைக் கூட்டித் தம்முடைய அதிகாரங்களையும் தம்முடைய ஆளுகைக்குட்பட்ட மாநிலங்களையும் உடனே துறக்கப் போவதாகவும் அவற்றை செனேட் மன்றம், பொதுமக்கள் இவர்களுடைய பொறுப்பில் விட்டுவிடுவதாகவும் திடீரென்று அறிவித்து விட்டார் அவர். அவருடைய 'பதவித் துறப்பு' எல்லாருக்குமே அதிர்ச்சி அளித்திட்டது. அவர்பால் பெருமதிப்பையும், அன்பையும் பொது மக்களிடையே அது உருவாக்கி விட்டது. செனேட் மன்றம் அவருடைய பெருந்தன்மைக்கு நன்றி செலுத்திடும் வகையில், நாட்டு நலனை முன்னிட்டு ஆட்சிப் பொறுப்புகளை அவர் ஏற்றிடத்தான் வேண்டும் என்று வற்புறுத்திற்று. ஏராளமான அதிகாரங்களை வழங்கிடவும் அது முன் வந்தது. அதுமட்டுமா? அவர் மீது அளவிடற்கரிய சிறப்புப் பட்டங்களையும் அள்ளிச் சொரிந்தது. அவருடைய வீரம், கருணை, நீதி, நேர்மை ஆகிய பண்பு நலன்களைப் பாராட்டிடும் வகையினில் தங்கத்தால் ஆன பட்டயம் செனேட் மண்டபத்தினுள்ளேயே பதிக்கப் பெற்றது. அப்போதுதான் முதற்குடிமகன் 'அகஸ்டஸ்' என்னும் மிக உயர்ந்த சிறப்புப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அது முதலாக ஆக்டேவியன் என்னும் இயற்பெயரே மறையும் அளவுக்கு 'அகஸ்டஸ்’ என்னும் சிறப்புப் பெயரே நிலைக்கலாயிற்று. "நீங்கள் கூறியவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் ஜூலியஸ் சீசரையும் மிஞ்சி விடுவார் போல் இருக்கிறதே உங்கள் அகஸ்டஸ் மன்னர்!" என்று தன் வியப்பினை வெளிப்படுத்தினான் செழியன். "நீங்கள் மொழிவது முற்றிலும் சரிதான் தூதுவர் அவர்களே! போரிலே புயவலிமையினைக் காட்டிடும் புலியாகப் பாய்வதைப் போன்று அமைதியை நிலைநாட்டுவதிலும் அழகுப் புறாவாக அவர் திகழ்கின்றார். கலைகளை வளர்த்திட வேண்டும். இலக்கியங்களைப்