4
கலைஞர் மு. கருணாநிதி
66 காணிக்கை இளமைக் காலந்தொட்டு எழுதுவதில் எனக்குத் தனி ஆசை. 1939ம் ஆண்டில் என் கைப்பட எழுதிய கதை. அதன் பெயர் செல்வ சந்திரா". எங்கேயோ அழுக் கேறிக் கிடந்த அந்தக் கையெழுத்துப் பிரதி அண்மை யில் கிடைத்தது. கடலில் மூழ்கிவிட்ட காவிரிப்பூம் பட்டினத்தின் மேல் எனக்கு இளமைப் பருவத்திலேயே ஒரு இடம் நெஞ்சில் உண்டு என்பதற்கு எடுத்துக்காட் டாக அந்தக் கதையைப் பின்வருமாறு தொடங்கி யிருந்தேன். "நீர்வளம் நிலவளம் தங்கிய திராவிட நாட்டின் கண் காவிரிப்பூம்பட்டினமெனும் நகரில் ...” இன்று தமிழகத்தை ஆட்சி புரியும் முதலமைச்சர் பொறுப்பையேற்று அதற்குப் பிறகு காவிரிப்பூம்பட் டினத்தில் 'பூம்புகார்' உருவாக்க வேண்டுமென்று நான் புதிதாகக் கருதியதாக யாரும் நினைக்கக் கூடாது. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும், புகழ் பரப்பிய தமிழ் வீரர்களின் பெயர்களும், பிஞ்சு வயது முதல் என் நெஞ்சில் நிலை பெற்றவைகளாகும். அந்த ஆழமான வேர்களின் அடிப்படையில் எழுந்ததுதான் இந்த வரலாற்றுக் கற்பனை. "முரசொலி" கிழமை இதழாக இருந்தபோது 'ரோமாபுரிப் பாண்டியனை'த் தொடங்கினேன். பின் முரசொலி நாளிதழாக மாறிவிட்டது. அதன் பிறகு 'குமுதம்' இதழில் 'ரோமாபுரிப் பாண்டியன்' தொடர்ந்து வெளிவந்தது.