பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

519


ரோமாபுரிப் பாண்டியன் 519 மன்னரின் சார்பில் மலர் மாலை சூட்டியதிலிருந்தே அவள் எத்தகைய உயர்ந்த இடத்தினில் இருந்திட வேண்டும் என்பது தெரியவில்லையா! என்று சிரித்தான் சிப்பியோ. "ஒரு வேளை அகஸ்டஸின் அருமை மகளோ?" "அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்." <4 'அது என்ன, வைத்துக் கொள்வது? "சொந்த மகள் இல்லை; ஆயினும் தனக்குப் பிறந்த ஜூலியாவைவிட எத்தனையோமடங்கு மேலாக அவளை நேசிக்கின்றார் அகஸ்டஸ் மன்னர். அதனால்தான் அப்படிச் சொன்னேன்!" "அவள் பெயர் என்ன?" ஜூனோ, என்ற சிப்பியோ அதற்கு மேலும் செழியனின் பொறுமையினைச் சோதித்திட விழையாதவனாக அவரைப் பற்றிய விவரங்களை விளம்பிடத் தலைப்பட்டான். "எகிப்திய எழிலரசி கிளியோபாத்ராவைப் பற்றித்தான் கேள்விப்பட் டிருப்பீர்களே?' "அழகினை அழியாமல் காப்பாற்றிடக் கழுதைப்பாலிலே குளித்தாள் எனக் கதை கதையாகப் பேசப்படும் அவளைப் பற்றி யார்தான் அறிந்திட மாட்டார்கள்?" "அந்தக் கிளியோபாத்ராவிடம் - பணிப்பெண்ணாகத் தோழிக்குத் தோழியாகத் தன் பிஞ்சுப் பருவத்தில் தொண்டு புரிந்து வந்தவளே இந்த ஜூனோ. அகஸ்டஸ் மன்னர் எகிப்தின் மீது படையெடுத்து வெற்றிக் கொடியினை நாட்டியபொழுது அந்தத் தோல்விச் சுமையினைத் தாங்கிடும் நெஞ்சுரத்தின் இழந்திட்ட நிலையில், தன் ஆசைக்கிளியும் மடிந்து விட்டாள் என்னும் தவறான செய்தியினை நம்பித் தற்கொலையைத் தழுவிக் கொண்டார் மாவீரர் அந்தோணி. அப்போது அரண்மனையில் நுழைந்துவிட்ட அகஸ்டஸ் மன்னரிடம் தங்கள் அரசியை இழிவாக நடத்திடக்கூடாது என்று இறைஞ்சி நின்றவள் இதே ஜுனோதான். தன் அரசியிடம் இவளுக்கிருந்த நன்றியுணர்வினைக் கண்டு வியப்பினில் ஆழ்ந்திட்டார் அகஸ்டஸ். ஆனால் அவருடைய கையினில் அகப்பட்டு விட்டால், அவமானம் அடைந்திட நேருமோ என்று அஞ்சிய கிளியோபாத்ரா, சீறும் நாகத்தை தன் சிவந்த இதழ்களிலே முத்தமிட வைத்துச் சாவின் மடியிலே போய் வீழ்ந்திட்டாள். தன் தலைவியின் பிணத்தைக் கட்டிக் கொண்டு ஜூனோ கதறிய கதறல், அகஸ்டசின் இதயத்தையே மெழுகென உருகிடச் செய்தது; அந்தச்