520
கலைஞர் மு. கருணாநிதி
520 கலைஞர் மு. கருணாநிதி சிறுமியின் மீது தணியாத பாச ஊற்றுப் பொங்கிப் பீரிடுமாறும் அது செய்துவிட்டது. எகிப்திலேயே அவளை விட்டுவிட்டுத் திரும்பிட மனம் இல்லாத அகஸ்டஸ் மன்னர், அவளைத் தம் கையோடு ரோமாபுரிக்கு அழைத்து வந்திட்டார். அன்று முதல் அவருடைய மகளுக்கு மேலான மகளாக. அவருடைய உள்ளமென்னும் அரியணையிலே செல்லப் பெண்ணாக -செல்வாக்குமிக்கவளாகக் கொலுவேறி விட்டாள் இந்த ஜூனோ! இன்று இவள்தான் அவருடைய அந்தரங்கச் செயலாளர் என்றாலும் மிகையில்லை. 46 'அவளைப் பார்த்தாலே அறிவு மிகுந்தவள் - ஆற்றல் நிறைந்தவுள் -என்று நாம் எண்ணிடும்படியான தோற்றத் தினையே அவள் தருகிறாள். மற்றவர்களின் இதயத்திலே இரக்க உணர்வினைச் சுரக்க வைத்திடும் சோகச் சாயலும் அவளது முகத்திலே இழையோடுகிறது... "ஏதேது, உங்களுக்கும் அவள் மீது இரக்கம் உண்டாகி விடும்போல் இருக்கிறதே!...பிறகு, இரக்கம் உருக்கம் ஆகி, உருக்கம் மயக்கமாகி, மயக்கம் மையலாகி...!" என்று முடிக்காமலே சிரித்திட்டான் சிப்பியோ. செழியனும் அவனது அடுக்குச் சொற்களைக் கேட்டு ஒரு வரட்டுச் சிரிப்பினை உதிர்த்திட்டான். எனினும் 'மையல்' என்னும் சொல்லைக் கேட்டதும் தாமரை என்னும் அந்தத் தையலே செழியனின் எண்ணத் திரையினில் மின்னினாள். அவளைப்பற்றிய நினைவுகள் படருமுன்னே, சிப்பியோ மீண்டும் தொடர்ந்திட்டான். உங்கள் நாட்டிலே, காதலியோ மனைவியோதான் ஓர் ஆடவன் கழுத்தில் மாலை சூட்டுவாள் என்று எப்போதோ கேள்விப்பட்டதாக நினைவு. நான் கூறுவது சரிதானா?" 'சரிதான் சிப்பியோ. ஆனால் கிழவர்களின் கழுத்திலே எந்தப் பெண்ணும் சூட்டலாம்." என்று செழியன் சிரித்திட்டான். "ஆனால் நீங்கள் ஒன்றும் கிழவர் இல்லையே! உங்கள் கழுத்திலோ ஜூனோ மாலை சூட்டியிருக்கிறாள். என்ன ஆகப் போகிறதோ?"- குறும்பு நெளிந்திடக் கண்களைச் சிமிட்டினான் சிப்பியோ. 14 எங்கள் நாட்டுப் பெண்ணொருத்தி இப்படி எனக்கு மாலை அணிவித்திருந்தால் நானும் உங்களைப் போலவே அஞ்சியிருப் பேன்.ஆனால் ஜூனோ உங்கள் நாடாயிற்றே! சின்னச் சின்னச் செயல்களுக்கெல்லாம் பெரிய பெரிய உட்பொருள்களைக் கற்பித்து உள்ளத்தைக் குழப்பிக் கொள்ளாமல், எதையுமே மேலோட்டமாகப் பெரும் போக்காகவே - மேனாட்டாராகிய நீங்கள் பார்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாதா? மேலும் எங்கள் நாட்டு வழக்கங்கள் -