பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

523


ரோமாபுரிப் பாண்டியன் 523 "இங்கேயும் புதிதாகக் கட்டடங்கள் எழும்பிடும்போல் தெரிகிறதே!" என்றான் செழியன். "ஆம் தூதுவர் அவர்களே! அகஸ்டஸ் பொதுமன்றம் எழும்பிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமா? குளிக்கும் அறைகள், குழாய்க் கால்வாய்கள், அரைவட்ட வடிவமான கலையரங்கங்கள், மற்போர்க் களங்கள், நுழை வாயில்கள் அலங்கார வளைவுகள், ஆலயங்கள் என்று ரோமாபுரியையே எழில்மிக்க நகரமாக உருமாற்றுவதற்கு இடையறாது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் எங்கள் அகஸ்டஸ் மன்னர்!" என்று பெருமிதத்துடன் சிப்பியோ பகர்ந்திடவும், செழியன் இடைமறித்தான். "இவற்றுக்கெல்லாம் நிறையச் செலவாகுமே! அரசாங்கக் கருவூலம் எல்லாவற்றுக்கும் இடங்கொடுக்குமா?" 44 'அது எப்படி முடியும்? தன்னுடைய சொந்த சொத்துக்களைக் கொண்டுதான் அகஸ்டஸே ஈடுசெய்கிறார்; போதாததற்கு, அக்ரிபா, டைபீரியஸ் போன்ற அவருடைய மிக நெருக்கமான நண்பர்களும் பொருள் கொடுத்து உதவுகிறார்கள்." தேர் எங்கெங்கோ வளைந்து விரைந்து ஓடிக் கொண்டிருந்தது. ஆமாம்; நாம் இப்போது எங்கே போகிறோம்?- திடீரென்று செழியன் இப்படிக் கேட்டதும், சிப்பியோ ஒரு கணம் திகைத்திட்டான். பிறகு தானே மறுவினா எழுப்பினான். I 'என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நாம் முதலில் அகஸ்டஸ் அவர்களைச் சந்தித்திட வேண்டாமா?" "சந்திக்கத்தான் வேண்டும்; ஆனால் இந்தத் தேர் எங்கோ குன்றுப் பகுதியை நோக்கிச் செல்கிறதே?" "அஞ்சாதீர்கள், அகஸ்டஸ் பெருமகனார் குடியிருக்கும் பாலதீன் குன்றுக்குத்தான் இந்தத் தேர் செல்கிறது. அப்புறம் இன்னொன்றையும் உங்களுக்கு நினைவுபடுத்திட வேண்டுமே!" "எதைப்பற்றி சிப்பியோ?” "அகஸ்டஸ் அவர்களைச் சந்தித்திடும்பொழுது, நம் அரசரை 'மன்னர்' அல்லது 'பேரரசர்' என்று அழைத்தது போல, அந்தச் சொற்களைக் கொண்டு இவரை விளித்திட வேண்டாம்.' “ஏன்?” 'தம்மை 'மன்னர்' என்று மற்றவர்கள் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மக்களாட்சியின் மாண்பு ஓங்கிடும் பொருட்டு ரோமானியக் குடியரசின் 'முதற்குடிமகன்' என்று தாம் அழைக்கப்