524
கலைஞர் மு. கருணாநிதி
524 கலைஞர் மு. கருணாநிதி. படுவதையே அவர் பெரிதும் விழைகின்றார். ஆகவே, நீங்களும் அவரை 'பிரின்செப்ஸ்' என்றோ அல்லது உங்களது மொழியில் நயமான முறையில் பெருமகனார்' என்றோ குறிப்பிட்டாலே போதும்." "நல்லது சிப்பியோ! அப்படியே நான் மறந்துபோய் ஏதாவது சொல்லிவிட்டாலும் நீங்கள் மொழிபெயர்க்கும் போது சரிசெய்து விடுங்கள்! என்று கேட்டுக் கொண்டான் செழியன். சிறிது நேரத்தில் அந்த அழகிய சிறு தேர், பசுமை கொழித்திடும் பொழில் நடுவே உள்ள அகஸ்டஸின் இல்லத்தின் முன்னே நின்றது. சில நொடிகளில் அகஸ்டஸே வெளிவாயிலுக்கு வந்திட்டார் செழியனை வரவேற்றிட! அவருடைய பரந்த தோளுக்குப் பின்னாலே இரு மான் விழிகள் மலர் விழிகள் தெரிந்தன. - - அந்தப் பொன்வண்டு விழிகளுக்குரிய பூங்கொடி யார் என்று ஊகித்திடச் செழியனுக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. ஏனெனில் அகஸ்டஸ் மாவீரனின் முகச்சாயலை அப்படியே உரித்து வைத்தாற் போல் நின்றிருந்தாள் அவள். அத்துடன் அவரே சிறிது நேரத்தில், "இவள்தான் என் மகள் ஜூலியா” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். செழியன் இரு கரங்களையும் கூப்பி அவளுக்கு வணக்கம் புரிந்திடும்பொழுதே, "தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தூதுவர் இவர்தானா?" என்று கேட்டவாறே வந்தாள் ஒரு நடுத்தர வயது நாரீமணி. தழையத் தழைய மெல்லிய துகில் உடுத்தியிருந்த அவள் முகத்திலே தளிர்நிலை கடந்திட்ட இலையின் முதிர்ச்சி படர்ந்திருந்த போதிலும் அவளுடைய குவளை விழிகளிலே ஒருவகைக் குறுகுறுப்பு நெளிந்திட்டது. "இவள்தான் என் மனைவி லிவியா” என்று அறிமுகப்படுத்தினார் அகஸ்டஸ். அவளுடைய கூற்றினைத் தமிழில் மொழி பெயர்த்திடும்பொழுதே. இவள் இவருடைய இரண்டாவது மனைவி. நான் முன்பு சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான் சிப்பியோ. தேரினில் வந்திடும்பொழுதே அகஸ்டஸின் குடும்ப வாழ்க்கை யினைப் பற்றி அவன் செழியனிடம் பகர்ந்திட்ட கதை இதுதான்; ஜூலியஸ் சீசரை வஞ்சகமாய்த் தீர்த்துக் கட்டிய கேசியஸ், புரூட்டஸ் இருவரும் முறியடிக்கப்பட்டு அவர்கள் தற்கொலையைத் தழுவிக் கொண்ட பின்னர். ஆட்சியைக் கைப்பற்றுவதில் அகஸ்டஸூக்குட்