பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

525


ரோமாபுரிப் பாண்டியன் டைய 525 போட்டியாகக் கிளம்பி வீழ்ச்சியுற்றவர்கள் அந்தோணியும் லெபிடசும் மட்டும் அல்லர்; சேக்ஸ்டஸ் பாம்பியஸ் என்று இன்னொரு பேராசைக் காரனும் இருந்தான். சிசிலி, சார்டினியா மாநிலங்கள் முதலில் அவனு கட்டுப்பாட்டிலேயே சிக்கியிருந்தன. 'ஸ்கிரிபோனியா' (Scribonia) என்பவள் அவனுடைய சொந்தக்காரி. அவளைத்தான் அகஸ்டஸ் முதலில் மணந்து கொண்டார். அவளுக்குப் பிறந்திட்டவளே ஜூலியா. அகஸ்டஸ் - ஸ்கிரிபோனியா இல்லறப் படகின் ஓட்டம் நெடுநாள் நீடித்திடவில்லை. கருத்துக்கள் மோதின; கசப்புகள் வளர்ந்தன. அந்தக் கசப்பின் அரிப்பில் இதயப்பிணைப்பு விழுந்திட்ட பின்னர் இணைந்து வாழ்ந்திடுவதில் என்ன பொருள் இருக்கிறது என்று எண்ணிய அகஸ்டஸ் ஸ்கிரிபோனியாவை மணவிலக்குச் செய்திட்டார். இதிலே வருந்துவதற்குரியது என்னவென்றால் ஜூலியாவை என்றைக்கு இவள் பெற்றெடுத்தாளோ அதே நாளிலேதான் அந்த மணவிலக்கு! அதன் பிறகு கிளாடியஸ் நீரோ என்பவரின் மனைவியாக வாழ்க்கைப் பட்டிருந்த இந்த லிவியாவின் பேரழகு அகஸ்டஸின் இதயத்தினைக் காந்தம் போல் ஈர்த்திட்டது. அவளைத் தம் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார். அதனால் தமது முதல் மனைவி பெற்றுத் தந்த ஜூலியாவிடம் அவருக்குள்ள இரத்த பாசம் சிறிதும் வற்றிடவில்லை ஜூலியா பருவச் சிட்டாக வளர்ந்த பின்னர், தம் உயிருக்குயிரான நண்பனும் தம் பகைவர்களை முறியடிப்பதிலும் தமக்கு உறுதுணையாய் -வலக்கரமாய் விளங்குபவனுமான அக்ரிபா என்பனுக்கே அவளை மணம் செய்து கொடுத்திட்டார் அகஸ்டஸ். அவன் இப்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளான். - சிப்பியோ மொழிந்திட்ட இந்தத் தகவல்களைச் செழியன் மனத்தினுள்ளே அசைபோட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அகஸ்டஸ் தம் இல்லத்தினுள் அவனை அழைத்துச் சென்றிட்டார். ஒரு நீண்ட அகலமான கூடம், நடுநடுவே பருமனான தூண்கள், சுவர்களும் தூண்களும் அத்திக்காயின் வெளிர் பச்சை வண்ணம் பூசப் பெற்றுக் கண்ணுக்கு விருந்தளித்தன. கூடத்தின் ஒரு புறத்திலே விதவிதமான கலைப்பொருள்கள் - சிற்பங்கள் அழகை உமிழ்ந்தன. அக்டேவியன் என்னும் இயற்பெயரோடு இருந்த காலத்தில் அகஸ்டஸ் பல பந்தயங்களில் ஈடுபட்டு அள்ளிக் கொணர்ந்திட்ட பரிசுப் பொருள்கள் வரிசை வரிசையாக இருந்தன. வேறொரு புறத்தில் நூல்கள் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த அத்தனை பொருள்களிலுமே செழியனைக் கவர்ந்தது கூடத்தின் மையப் பகுதியில் சுவர் ஓரமாக வைக்கப்பெற்றிருந்த ஜூலியஸ் சீசரின் சின்னஞ்சிறு பளிங்குச் சிலைதான்.