பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

கலைஞர் மு. கருணாநிதி


528 கலைஞர் மு. கருணாநிதி தெரியாதா? அலையில்லாத கடலாவது, ஆசையில்லாத பெண்ணாவது இந்த உலகத்திலே ஏது!" "ஏன், ஆண்கள் மட்டும் ஆசையே இல்லாதவர்களோ? ஆண்களுக் குப் புகழாசை! நகை ஆசையால் பெண்கள் ஒரே ஒருவருடைய-தங்கள் கணவருடைய மனத்தை மட்டுமே வதைப்பார்கள். ஆனால் ஆண்கள் புகழாசையால் நாடு பிடித்திடக் கிளம்பி எத்தனையோ பேருடைய மனத்தை வதைப்பதில்லையா? உயிரையே ஏப்பம் விடுவதில்லையா? “நீ ஏனடி ஜூலியா அவரிடம் வாதம் பண்ணுகிறாய்? பெண்கள் என்றாலே உன் அப்பாவுக்கு எப்போதுமே ஓர் இளக்காரம்," என்று செல்லமாகச் சிணுங்கிய லிவியாவின் விழிகள் சட்டென்று வியப்பினால் விரிந்தன. அதற்குக் காரணம் அகஸ்டசிடம் செழியன் எடுத்து நீட்டிக் கொண்டிருந்த ஓர் அழகான சிறிய பேழைதான். "இதற்கென்ன இப்போது அவசரம்?'- திகைப்புடன் கேட்டார் அகஸ்டஸ். "தங்களுடைய குடும்பத்திற்கு இது என்னுடைய தனிப்பட்ட முதற்பரிசு. அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கச் சார்பிலான பெரும் பரிசுப் பொருள்கள் மரக்கலத்திலே உள்ளன. அவை பின்னர் தங்கள் செனேட் மன்றத்தில் கொலுவேறி இருந்திடும் பொழுது முறைப்படி அன்பளிப்புக்களாக வழங்கப்படும்" என்று விளக்கினான் செழியன். "என்ன இருந்தாலும் நீங்கள் கெட்டிக்காரர்தான், தமிழகத் தூதுவரே! என் குடும்பத்தினரை மகிழ்வித்தாலே போதும் என்றுதானே அவர் களுக்கு மட்டும் முதல் பரிசு கொண்டு வந்திருக்கிறீர்கள். எனக்கும் அப்படித் தனிப்பட்ட முறையில் பரிசு கொண்டு வந்திருக்கக்கூடாதா? என்று கண்களை சிமிட்டியவாறே கேலியாக வினவினார் அகஸ்டஸ். "மன்னிக்க வேண்டும், 'பிரின்செப்ஸ்' அவர்களே! தங்கள் குடும்பம் என்றால் அதில் தாங்களும் ஓர் அங்கம் தானே - அடக்கம்தானே என்பது என் தாழ்மையான கருத்து. மேலும் இந்த எளிய பரிசினை இப்பொழுது நான் அளிப்பது தங்களிடம்தானே அன்றி, அவர்களிடம் அல்லவே!" செழியன் இவ்வாறு கழறியதும் ஏதோ காணாத புதுமையைக் கண்டுவிட்டவள் போலத் துள்ளிக் குதித்திட்டாள் ஜூலியா. "சரியாக மடக்கினீர்கள், தூதுவர் அவர்களே! சரியாக மடக்கினீர்கள்! என் தந்தைக்குக் குடும்பம் என்கிற ஒன்று இருக்கிறது என்னும் நினைப்பே இருப்பதில்லை. அதில் தானும் ஓர் அங்கம் என்கிற கருத்தும் .