530
கலைஞர் மு. கருணாநிதி
530 கலைஞர் மு.கருணாநிதி மூன்றாவது முத்தாரத்தைத் தாமே அணிந்து கொண்டார் அகஸ்டஸ். உங்களுக்கு நன்றாக இருக்கிறது; மிக நன்றாக இருக்கிறது!" இரண்டு பெண்மணிகளும் கூவினார்கள். "சாதாரணமாகப் பரிசுப் பொருள்களைக் கண்டோ, பாராட்டு மொழிகளைக் கேட்டோ நான் மயங்கிவிடுவதில்லை. அவற்றைக் கொண்டு என்னை யாரும் மயக்கிடவும் முடியாது. ஆனால், உங்களுடைய தமிழகத்து முத்தாரம் என்னுடைய அந்த உறுதிப் பாட்டைக்கூடத் தளர்த்திடும்போல் இருக்கிறதே! - உற்சாகத்தில் மிதந்து தெறித்து விழுந்திட்ட, அகஸ்டஸின் இந்த உளந்திறந்த பாராட்டு மொழிகள், செழியனின் செவிகளில் தேனாகவே இனித்தன. அந்தப் பாராட்டு மொழிகள் மட்டுந்தானா? அவருடைய கலகலப்பான பேச்சு - சிரிப்பு ஒரு நாளிலேயே பலநாள் பழகிய நட்புரிமையோடு பாசத்தைப் பொழிய விட்டிடும் உயரிய பண்பாடு - எல்லாமேதான் அவனுக்கு இனித்தன. அதே நேரத்தில், 'ஆனால் இத்தனைக்கும் நடுவே இவர் ஓர் ஆழமான ஆள்தான். வெற்றுப் புகழ்ச்சியாலோ விதவிதமான பரிசுகளாலோ இவரை விலைகொடுத்து வாங்கிட முடியாதுதான்; தமக்கு என்று ஒரு நெறியினை வகுத்துக்கொண்டு அந்த நெறியிலிருந்து பிறழாத ஓர் உறுதிப்பாடே இவரை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது' என்கிற ஓர் அழுத்தமான மதிப்பீட்டையும் தூதுவன் என்கிற முறையிலே தன் சிந்தையில் பதிய வைத்துக்கொள்ளத் தவறிடவில்லை செழியன். சிறிது நேரம் சென்ற பின்னர் "நம்முடைய தூதுவர் நாளைக் காலையில் எங்கே வரவேண்டும் தெரியுமா?" என்று சிப்பியோவை நோக்கிக் கேட்டார் அகஸ்டஸ். "ஓ! எனக்குத் தெரியும்!' - குயிலின் குரல் ஒன்று திடீரென்று மிதந்து வந்தது. அகஸ்டஸின் அந்தக் கேள்வியும் சரி, அதற்குக் கிடைத்திட்ட மறுமொழியும் சரி இலத்தீன் மொழியிலேயே இருந்தமையால் அவர்கள் பேசிக்கொண்டது செழியனுக்கு புரிந்திடவில்லை. ஆயினும் அவனுடைய சிந்தனையோ, 'இந்தக் குரலை எங்கோ கேட்டிருக்கிறோமே! எங்கே கேட்டோம்?" என்னும் ஆராய்ச்சியிலே ஈடுபடாமல் இல்லை! புல்லாங்குழலொத்த இனிமைக்குரல் கொண்ட அந்த ஏந்திழை செழியனின் ஆராய்ச்சிக்கு - நினைவாற்றலுக்கு மேலும் வேலை -