ரோமாபுரிப் பாண்டியன்
535
ரோமாபுரிப் பாண்டியன் 535 அவருக்கு மாற்றாகவே இப்போது இவர் இங்கே வந்துள்ளார். இவருடைய வருகையால் நம் இரு நாடுகளுடைய வணிகத்தொடர்பு கள். கலச்சார உறவுகள் மேலும் வளர்ந்திடும் என்று நான் திண்ணமாக நம்புகிறேன். நம்முடைய மக்களின் சார்பாக அரசின் சார்பாக செனேட்டின் சார்பாகத் தமிழகத்திலிருந்து வந்துள்ள இந்த இளந் தூதுவரை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்." 1 -அகஸ்டஸ் இவ்வாறு அறிமுகப்படுத்தி அமர்ந்திடவும் அந்த செனேட் மண்டபமே அதிர்ந்திடும்படியாகக் கரவொலிகள் எழுந்து முழங்கின. அவருடைய உரையினை சிப்பியோ அவ்வப்போது மொழி பெயர்த்திடுவதைக் கேட்கக் கேட்கச் செழியனின் மேனியெல்லாம் புளகமுற்றுச் சிலிர்த்தது. தேனில் விழுந்திட்ட வண்டெனக் கிறங்கிப் போனான் அவன். பின்னர் தன் நன்றியுரையினை அவன் நவின்றிட எழுந்திட்டான். "மாட்சிமை தங்கிய அகஸ்டஸ் பெருமகனார் அவர்களே, மாண்புமிக்க செனேட் உறுப்பினர்களே! தங்கள் நல்வரவேற்பிற்கு என் நன்றியறிதலைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய தலைவரின் அன்பார்ந்த பாராட்டு மழையிலே நனைந்து போன நான், என் நாவினைப் புரட்டி நாலுவார்த்தை பேச முடியாத அளவுக்கு இன்பத்தில் சிலிர்த்து நிற்கிறேன். திக்கெட்டும் புகழொளி வீசிடும் தங்களுடைய ரோமாபுரிப் பேரரசின் கீர்த்தியினையோ வீர வரலாற் றையோ நான் ஒன்றும் புதிதாகப் புகன்றிடத் தேவையில்லை. எனினும் ஒரு சிலவற்றைப் பற்றி குறிப்பிடாமல் போனால் கடமையிலிருந்து வழுவிய குறைபாட்டுக்கு இலக்கானவன் ஆகிவிடுவேன். தங்கள் மாநகரிலே மலர்ந்துள்ள கட்டடக் கலை என் மனத்தினை மிகவும் கவர்கிறது. செங்கல்லாகத் தாம் கண்ட ரோம் நகரைச் சலவைக் கல்லாக மாற்றிய சிற்பியே அகஸ்டஸ் என்னும் புகழ் மகுடத்தினை வருங்கால வரலாற்றாசிரியர்கள் பொருத்தமாகப் புனைந்து மகிழ்ந்தாலும் நான் வியப்படைந்திட மாட்டேன். இத்தகைய கட்டட அமைப்புத் திட்டங்க ளால் எத்தனையோ ஏழைகளையும் வாழவைக்கிறார் தங்கள் தலைவர். அடுத்து, மக்களுக்கும் மக்களின் பிரநிநிதிகளாகிய தங்களுக்கும் அவர் தந்திடுகின்ற மதிப்பு என் இதயக் கிண்ணியில் தேனைச் சொரிகின்றது. 'மாமன்னன்' என்று மற்றவர்கள் தம்மை அழைப்பதையே வெறுக்கின்ற அளவுக்கு அவர் அதிகாரப் பித்து அற்றவராக உண்மையான குடியரசுவாதியாகத் தம்மை உயர்த்திக் கொண்டுள்ளார். குடிமக்களின் எண்ணப்படியேதான் எங்கள் நாட்டுக் கொற்றவர்களும் கோலோச்சு