பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

537


ரோமாபுரிப் பாண்டியன் 537 "தெற்கே இருந்து வந்தோம் என்பது சரியல்ல. இப்போதைய தமிழகம் முன்னொரு காலத்தில் தெற்கே பரந்து கிடந்திட்ட இலமூரியக் கண்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பகுதியாக இணைந்து இருந்தது என்பதே பொருத்தமான கூற்றாகும். அந்தக் கண்டத்தில் பாய்ந்திட்ட பஃறுளியாறு ஓங்கி உயர்ந்து நின்றிட்ட குமரிமலை எல்லாவற்றையுமே கடல் விழுங்கிவிட்டது” என்றான் செழியன். "மலையைக்கூடக் கடல் விழுங்க முடியுமா என்ன?" என்று தம் வியப்பினைத் தெரிவித்து விட்டார் செனேட்டர். அதற்குச் செழியன் விடையளிக்கு முன்னரே அகஸ்டஸுக்கு நெருங்கிய நண்பரும், பெருங்கவிஞருமான வெர்ஜில் என்பவர் எழுந்து "இமயமலையே ஒரு காலத்தில் கடலாகத் தான் இருந்தது என்கிறபோது குமரி மலையைக் கடல் விழுங்கியதில் என்ன வியப்பு இருக்கிறது? கடல் மலையாவதும், மலை கடலாவதும் இயற்கைக் கொந்தளிப்பின் விளைவுகளே அன்றி வேறல்ல" என்று சிரித்திட்டார். "இந்த நேரத்தில் இன்னொரு பேருண்மையைக் கூறவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இமயமலையும் கங்கையாறும் கடற் பகுதி களாக இருந்த காலத்தில் சிந்து நதி பாயும் நிலப்பரப்பிலே எங்கள் முன் னோர்களான திராவிட இனத்தவர்களே சிறப்போடு வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களுடைய நாகரிகமே நாளாவட்டத்தில் அங்கிருந்து கிளம்பி பாபிலோனிய நாகரிகமாக -போனிசிய நாகரிகமாக- கிரேக்க நாகரிகமாக - எகிப்திய நாகரிகமாகப் பல வடிவங்கள் எடுத்துப் பரவிய தாக எங்கள் நாட்டு அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்" என்றான் செழியன். ஆமாம், ஆமாம்! நானும் கூட அப்படித்தான் ஒரு கிரேக்க அறிஞர் சொன்னதைக் கேட்டதாக நினைவு" என்றார் கவிஞர் வெர்ஜில். உடனே ஹொரஸ் என்னும் இன்னொரு கவிஞர் எழுந்தார். "இப்பொழுது உள்ள தமிழகத்தில் உள்ள திராவிடர்களுக்கும் விந்திய மலைக்கு வடக்கே உள்ள மக்களுக்கும் உறவு முறைகள் உண்டா?" "அறவே இல்லை; இடையில் எழுந்த மலைகளே எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய தடுப்புச் சுவர்கள் ஆகிவிட்டன. நெடுங்காலத் திற்கு முன்னரே அங்கேயே தங்கியிருக்க நேர்ந்திட்ட திராவிடர்கள் வேண்டுமானால் புதிதாக வந்த இனத்தவரோடு கலந்து அவர்களாகவே மாறியிருக்கலாம். ஆனால் வடக்கே எத்தகைய சமூக மாறுதல் ஏற்பட்ட போதிலும் தென்பகுதியில் வாழ்கின்ற திராவிடர்களாகிய நாங்கள் அத்தகைய மாறுதல் எதற்கும் இலக்காகாமல் தனித்துத் தான் வாழ்ந்து வருகிறோம்.