பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538

கலைஞர் மு. கருணாநிதி


538 கலைஞர் மு. கருணாநிதி "இப்போது வடக்கில் மட்டும் உள்ள ஆரியர் பிற்காலத்தில் தெற்கேயும் வரலாம் இல்லையா?" "அதைப்பற்றி இப்போதே நான் எப்படி ஆருடம் கூற முடியும்?" உங்கள் நாட்டினருக்கு ஆருடம் பற்றிக்கூடத் தெரியுமா?" என்று வியப்போடு வினவினார் வேறொரு செனேட்டர் ஏன் இல்லை? ஆனால், விண் அறிவினை அடிப்படையாகக் கொண்டிட்ட ஆருடம், சோதிடம் - போன்றவற்றை விஞ்ஞானக் கண் ணோட்டத்துடன் அணுகி வளர்த்திடாமல் வேறெங்கோ திசை திருப்பிக் கொண்டு போய்விட்டதால் தான் என் போன்றவர்களுக்கு அவற்றிலே நம்பிக்கை இல்லையேயன்றி, அந்தக் கலைகளில் ஈடுபாடு கொண்டவர் களும் எங்கள் நாட்டில் இருந்தார்கள்; இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, எல்லாத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவும் எங்கள் நாட்டவருக்கு உண்டு. அதனால்தான் தமிழில் மருத்துவ நூல், நீதி நூல், இலக்கண நூல், இலக்கிய நூல் முதலான பலதரப்பட்ட நூல்களும் இருக்கின்றன." "போகட்டும், உங்களுடைய முத்து, பொன்னை விட உயர்ந்ததா?" என்று திடீரென்று ஒரு வெடிகுண்டை வீசினார் முதலில் வினா எழுப்பிய செனேட்டர் "கண்டிப்பாக உயர்ந்ததுதான்! அதிலே ஐயப்பாடு ஏது? எங்களு டைய ஒரேயொரு முத்துவுக்கு அதைப்போல மூன்று மடங்கு எடை யுள்ள பொன்னை வைத்தால் கூட அதற்கு ஈடாகுமா?' - அறைகூவலே விடுத்தான் செழியன். அவனுடைய மிடுக்கான குரல், ஆணித்தரமான வாதங்கள். தயக்கம் துளியும் இன்றி உடனுக்குடன் சுறுசுறுப்பாக அளிந்த விடைகள் எல்லாமே அங்கே குழுமியிருந்த அத்தனை பேரையுறே மூக்கின்மீது விரல் வைத்திடுமாறு தூண்டின. செனேட்டின் அன்றைய நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததும் எல்லா உறுப்பினர்களுமே போட்டி போட்டுக் கொண்டு செழியனின் கரத்தைப் பற்றிக் குலுக்கினர். கட்டித் தழுவினர்; வாழ்த்து மலர்களைச் சொரிந்தனர்; 'தகுதியான திறமைசாலியைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார் பாண்டிய வேந்தர்' என்று பாராட்டு மகுடத்தையும் புனைந்தனர். அன்று மாலை வேளை. தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தின் உப்பரிகையில் நின்றவாறே தன் பார்வையைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் செழியன். சற்றுத் தொலைவில் டைபர் நதி கடல் குஞ்சாகக் காட்சி அளித்திட்டது; அதிலே படகுகளும்-நாவாய்களும் மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது.