540
கலைஞர் மு. கருணாநிதி
540 கலைஞர் மு. கருணாநிதி பறிகொடுத்த பொன்னகையை மறுபடியும் அடைந்தவள் போல் பருகினாள் அவன் முகத்தைப் பார்வையால், பாவையவள்! கூர்வேலாய்ப் பாய்ந்து வந்த கோதையின் விழிவீச்சை நேராகச் சந்திக்கும் வலுவேது செழியனுக்கு? நிலைகுலைந்தான்; ஒருகணத்தில்! நாணம்தான் இடம் மாறத் தலை குனிந்தான்; தளிர்க்கொடியாள் தாமரையை நினைத்திட்டான்; அலை பாயும் கடலெனவே ஆடிற்று அவன் இதயம்! 'மலையென்றும், மடுவென்றும் மண்ணிலே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியதோடு நின்றிருக்கக் கூடாதா? உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்னும் பிளவுகளுக்கு விளை நிலமாய் மனித இதயங்களிலும் மேடு - பள்ளங்களை உண்டாக்கிவிட்ட ஒருவன் எவ்வாறு நடுநிலைமை பிறழ்ந் திடாத இறைவனாக இருந்திட முடியும்?' என்னும் அறிவாராய்ச்சி யினாலோ என்னவோ ஆண்டவன் இருந்திடுவதாகக் கூறப்படும் அற்புதங்களையெல்லாம் நம்புவதே இல்லை செழியன். ஆனால், இந்த ஜூனோவைப் பார்த்திடும்பொழுது அந்தத் தாமரைதான் ஆண்டவனிடம் வரம் பெற்றுத் தேவதைகளைப்போல் றக்கைகளைக் கட்டிக்கொண்டு இப்படித் திடீரென்று ரோமாபுரி மண்ணிலே குதித்திருப்பாளோ என்று வேடிக்கையாக எண்ணிடலா னான் அவன். தாமரைக்குள்ள அதே மிதப்புக் கன்னம் - அதே சங்குக் கழுத்து - அதே இளஞ்சிரிப்பு - அதே கிறங்கும் பார்வை எல்லாமே அவளேதான்! எனி னும் அவளிடமிருந்து இவளைப் பிரித்துக் காட்டிடும் சில வேறுபாடு களும் இல்லாமல் இல்லை. தாமரையோ இளவரசிக்கே உரிய முறையில் கச்சையும் சேலையுமாக ஒயிலாக உடையுடுத்துப் பொற்சிலை போல் காட்சியளிப்பாள்; இந்த ஜூனோ தனது நாட்டுப் பாணியில் மெல்லிய அங்கியொன்றினை மேலேபோர்த்துக் கொண்டு தலையையும் ஓரளவு முக்காடிட்டவாறு பொம்மைபோல் தோற்றமளிக்கிறாள். தாமரைக்குத் தொடையினைத் தொடும் அளவுக்குக் கருமையான கூந்தல்; ஜூனோவுக்கோ செம்மறிக் கடாவின் மேலுடல் போலச் சுருள் சுருளான தலைமுடி. தாமரை, கண்களுக்கு அஞ்சனம் மட்டுமே தீட்டியிருப்பாள். இந்த ஜூனோவோ இமைக் கூட்டினிலிருந்து புருவம் வரையுள்ள அகலமான விழி மேடு எங்கும் காயாம்பூ நிறத்தில் வேறு எதனையோ மினுமினுவென்று பூசியிருக்கிறாள். 'இவள் தாமரையாகவே இருந்திடக் கூடாதா?' என்று ஏங்கித் தவித்திட்டான் செழியன்; 'எகிப்து மண்ணிலே பிறந்து ரோமாபுரியிலே