பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

541


ரோமாபுரிப் பாண்டியன் 541 அகஸ்டஸின் செல்ல மகள் போல் வாழ்ந்து வரும் இவள் எப்படித் தாமரையாக முடியும்?' என்று தன்னைத்தானே சமாதானமும் படுத்திக் கொண்டான், அடுத்த கணமே! ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது; சிப்பியோ செப்பியதைப்போல், மற்றவர்களுக்கெல்லாம் கனல் துண்டாய்க் காட்சி அளித்திட்ட அவள் செழியனைப் பொறுத்தமட்டில் அனலை வீசிட மாட்டாள் என்பதே அது. அவளுடைய பசித்த பார்வைக்கு - மயக்கும் முறுவலுக்கு வேறு என்ன தான் பொருள்? ஆனால் - தாமரை கொலுவேறிக் கோலோச்சிடும் என் இதய பீடத்தில் இந்த ஜூனோவுக்கு இடமா?' - எண்ணங்கள் சிலிர்த்தெழுந்தன செழியனின் நெஞ்சினுள். அதே சமயம்... "உங்களுக்கு இங்கே ஏதாவது வசதிக்குறைவாக இருக்கிறதா?" என்று கேட்டாள் ஜூனோ. செழியனுக்கு ஒரே வியப்பாகப் போய்விட்டது, அவளுடைய வினாவினைக் கேட்டதும். உனக்குத் தமிழ்க் கூடத் தெரியுமா?" என்று உணர்ச்சிப் பெருக்கோடு மறு கேள்வியினைத் தொடுத்திட்டான். "ஓ தெரியுமே! நான் எகிப்து நாட்டில் இருந்திட்ட பொழுதே எங்கள் பேரரசி கிளியோபாத்ராவிடம் மஸ்லின் துணிகளை விற்பதற்காக இந்தப் பக்கத்து யவனக்கிழவர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர் உங்கள் நாட்டுக்கும் வாணிகத்தை முன்னிட்டுப் போய் வருவாராம். அவர்தான் உங்களுடைய தமிழ் மொழியின் இனிமையைப்பற்றி எடுத்துச் சொல்லி எனக்கும் கற்றுக் கொடுத்தார். உனக்குத் தமிழ் தெரியும் என்பதை அகஸ்டஸ் பெருமகனாரும் அறிவாரா?" "நன்றாக அறிவார்! ஆனால் அண்மைக் காலம்வரை இந்த உண் மையை அவரிடம் உரைத்திடவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டிட வில்லை. நீங்கள் முத்தாரத்தைப் பரிசளித்துவிட்டுத் திரும்பினீர்கள் அல்லவா? அதற்குப் பிறகுதான் எனக்கும் தமிழ் தெரியும் என்று அவரிடம் கூறினேன். தமிழைப் பற்றிய சிறப்புக்களையும் எடுத்துரைத் தேன். நான் சொன்னவற்றை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவர் செனேட்டர்களிடம் அவ்வளவு அருமையாக உங்களை அறிமுகப் படுத்தினார்". “அப்படியா? நீ புகல்வதைக் கேட்கக் கேட்க எனக்கு எவ்வளவு பூரிப்பாக இருக்கிறது தெரியுமா? எங்கள் நாட்டைப் பற்றி - மொழியைப்