ரோமாபுரிப் பாண்டியன்
545
ரோமாபுரிப் பாண்டியன் 545 கிரேக்கர்களுக்கு ஹோமர் எவ்வாறோ அப்படித்தான் ரோமானியர் களாகிய எங்களுக்கு இவர் மாபெரும் கவிஞர் அகஸ்டஸ் இங்ஙனம் இயம்பிடும் பொழுதே மேசனஸ் இடைமறித்தார். “கவிஞர் வெர்ஜில் அவர்கள் வெறும் பாவாணர் மட்டுமல்ல; பெரிய தொலைநோக்காளரும் (தீர்க்கதரிசியும்) கூட ! பிற்காலத்தில் பிறந்திடப் போகும் ஓர் ஆண் குழந்தை இந்த உலகிற்கே ஒரு பொற்காலத்தைக் கொணரப் போவதாக இவர் முன்பே எழுதி வைத்துள்ளார். நம்முடைய அகஸ்டசின் தங்கை ஆக்டேவியாவுக்கும் அந்தோணிக்கும் பிறந்திட்ட மார்செல்லஸ் என்னும் பையன்தான் அத்தகைய ஒளி விளக்காகத் திகழ்வானோ என்று நாங்கள் எல்லோரும் எண்ணினோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே அவன் இறந்து போனான். என்றாலும் கவிஞர் வெர்ஜிலின் ஆருடம் பலித்தே தீரும் என்று நாங்கள் எல்லோரும் உறுதியாக நம்புகிறோம்." மேசனஸ் இப்படிக் கூறி முடித்ததும் அகஸ்டஸ் மேலும் தொடர்ந் திட்டார். அதோ... இருக்கிறாரே அவர்தான் கவிஞர் ஹோரேஸ், பாடல் களிலே நகைச்சுவையினை வழியவிடுவதில் கைதேர்ந்தவர், போலி வாழ்க்கை வாழ்பவர்களும் வாய்ச்சொல்லில் வீரர்களும் இவருடைய நையாண்டிக் கணைகளால் நையப் புடைக்கப்படுவார்கள். அதற்காக ஓரவஞ்சனையாகவோ ஒரு சார்பாகவோ குறை கண்டு பிடிப்பதனையே தொழிலாகவும் இவர் கொண்டிடவில்லை. சிரிக்க வைப்பதோடு நில்லாமல், சிந்திக்க வைக்கவும் செய்வார்; சீர்திருத்த நோக்கங்களுக்கு ஆக்கம் அளிப்பவர்...." அகஸ்டஸ் தொடர்ந்து விருந்தினரை அறிமுகம் செய்தார்; "அதோ, அந்தப் பக்கம் அமர்ந்திருக்கிறாரே அவர் தான் மாபெரும் எழுத்தாளர் லிவி. கவிஞர் வெர்ஜில் எங்ஙனம் காப்பியம் இயற்றுவதில் வல்லவரோ, அவ்வாறே வரலாற்று நூல்களை உரைநடையில் வடித்துத் தள்ளுவதில் இவர் தலை சிறந்தவர்.' - இன்னும் டிபுலெஸ், பிராபெர்சியஸ் முதலானவர்களையும் அறி முகப்படுத்திக்கொண்டே சென்றிட்ட அகஸ்டஸ் கோப்பையில் ஊற்றி வைக்கப்பட்ட ஒயினைச் செழியன் குடிக்காமலேயே இருப்பதைக் கவனித்துவிட்டார். "ஏன், ஒயின் உங்களுக்குப் பிடிக்காதா?"