ரோமாபுரிப் பாண்டியன்
547
ரோமாபுரிப் பாண்டியன் 547 னாக ஆகிவிட முடியுமா? எழுதுகோலை எடுத்தவன் தன்னைச் சுற்றிலும் உள்ள அசிங்கத்தைப் 'படம்' வரைந்தால் மட்டும் போதாது; அதனை அகற்றுவதற்குரிய 'பாடம்' புகட்டுகின்ற சிந்தனைத் தெளிவு உள்ளவனாக வும் அவன் இருந்திட வேண்டும்!" "ஆமாம்; எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? ஏன் வீணாகக் கதை அளக்கிறாய்?"-மேசனஸ் இப்படிக் குறுக்கிட்டு வெட்டியதும் அகஸ்டஸின் விழிகள் இரண்டும் இரு நெருப்புத் துண்டங்களாகச் சிவந்து விட்டன. ஆயினும் அவர் உடனே ஆத்திரத்தைக் கக்கிடவில்லை வார்த்தை களின்மூலம். அவரது பார்வை எதிரே சிரித்துக் கொண்டிருந்த மலர்க் கொத்தின் மீதே நிலை குத்தி நின்றிட்டது. தம்முள் சீறி எழுந்திடும் சினத்தினைத் தணித்துக் கொள்ளத்தானோ என்னவோ, கோப்பையில் பாதிக்குமேல் எஞ்சியிருந்த ஒயினைத் தம்முடைய வழக்கத்திற்கு மாறாக ஒரே விழுங்கில் மடமடவென்று விழுங்கனார். குழுமியிருந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாரும் மேசனஸ் இப்படிக் குத்தலாக அகஸ்டஸை சாடியதைக் கேட்டு அதிர்ச்சியே அடைந்தனர். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் ஊமை நாடகமாகவே தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டனர். சில காலமாகவே அகஸ்டஸ்-மேசனஸ் நட்புப் பாலத்திலே வெடிப்பு விழுந்துவிட்டதை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றாலும், வெளிநாட்டுத் தூதுவர் முன்னிலையில் தங்கள் ஆட்சித் தலைவரை மட்டந்தட்டிப் பழி வாங்கிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திடவே இல்லை. கலகலப்பாக விளங்கிய விருந்துக்கூடம் சட்டென்று கல்லறைக் கூடம் போல் அமைதியில் ஆழ்ந்திட்டது செழியனுக்கு வருத்தத்தையே அளித்திட்டது. மேசனஸ் ஏதோ வரம்புமீறித் தாக்கியிருக்க வேண்டும் என்று அவன் ஊகித்துக்கொண்டான். ஆனால் அவருடைய தாக்குதலை ஜூனோ மொழி பெயர்த்திடவில்லை. தன் உதடுகளை இறுக்கி மூடிக்கொண்டு விட்டாள் அவள். சிறிது நேரத்தில் ஹொரேஸ் எழுந்தார். குரலைக் கனைத்துக் கொண்டார்: "மதிப்பிற்குரிய மேசனஸ் அவர்களே! நம்முடைய ஆட்சித் தலைவரை இவ்வளவு அலட்சியமாகத் தாங்கள் பேசியது எனக்கு மிகுந்த துயரினைக் கொடுக்கிறது. இந்த ரோமாபுரி நாட்டிலே இலக்கிய