பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552

கலைஞர் மு. கருணாநிதி


மகிழ்ச்சி ஆரவாரத்தின் இறுதியில் மௌனத்தில் புதைந்துவிட்ட அந்த விருந்து மண்டபத்தினின்றும் செழியன் வெளியே வந்திட்ட பொழுது ரோமாபுரி நகரமே இருளில் மூழ்கியிருந்தது. ஆயினும் அந்தப் 'பாலத்தின்' குன்றிலிருந்து சற்றுக் கீழே பார்த்திட்டபோது மரங்களை மொய்த்திடும் மின்மினிப் பூச்சிகளைப் போல், ஆங்காங்கே விளக்குகள் எரிவதும் தனி அழகாகத்தான் இருந்தது. வாசல்வரை வந்து தன் கையைக் குலுக்கி விடை கொடுத்துவிட்டு அகஸ்டஸ் திரும்பிய பின்னர், செழியன் தனக்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்த தேரினை நோக்கி நடந்தான். அவன் பின்னாலேயே வந்திட்ட ஜூனோ “சரி, போய் வருகிறீர்களா?" என்றாள். "ஏன், நீ வரவில்லையா?" என்று கேட்டான் செழியன். "நான் எதற்கு வரவேண்டும்?" 'வந்து... ஒன்றுமில்லை... ஒருவேளை நீ வருவாயோ என்று தான் கேட்டேன். " என்று மென்று விழுங்கினான் செழியன். “நான் வரத்தான் வேண்டுமென்று தாங்கள் விரும்பினால், நான் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்" அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். - "என்ன இப்படித் திகைத்துப்போய் நிற்கிறீர்கள்? ஆசை-அச்சம் இரண்டும் தங்களை அலைக்கழிக்கின்றன இல்லையா? 'களுக்'கெனச் சிரித்தவாறே வினவினாள் ஜூனோ. 'ஆசையாவது அச்சமாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை!' -சமாளித்திட முயன்றான் செழியன். "ஏன் மறைக்கிறீர்கள்? சற்று முன்பு விருந்து மண்டபத்திலே மேசனசுக்கும் மற்ற கவிஞர்களுக்கும் வார்த்தைப் போர் நடைபெற்றதே; அதை என் மூலம் அறிந்திடவும் தங்களுக்கு ஆசை; அதற்காக என்னை இப்போது இந்த இரவிலே தனியாக அழைத்துச் சென்றால் மற்றவர்கள்