554
கலைஞர் மு. கருணாநிதி
554 கலைஞர் மு.கருணாநிதி 'ஊம்... அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே நடக்காது. மேசனஸ் இருக்கிறாரே, அவர் இப்போது பல் இல்லாத நச்சுப்பாம்பு; காலொடிந்து விட்ட கிழட்டுப்புலி! அவருடைய பேச்சை இனி யார் கேட்பார்கள்?” "என்றாலும் அவர் பெரிய செல்வச் சீமான் இல்லையா?" "சீமானாக இருந்தால் மட்டும் போதுமா? எதையும் செய்துவிட முடியுமா?" "போகட்டும், மேசனசுக்கு மனைவி மற்றும் எல்லாரும் இருக்கிறார் களா? பெருங்குடும்பமா?" "ஏன், அவர் வீட்டிலே பெண் எடுக்கலாம் என்கின்ற எண்ணமா?" -கேலியாகச் சிரித்திட்டாள் ஜூனோ. "ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தால் இப்படி குறுக்கே வெட்டு கிறாயே? மேலும் அவரது குடும்பத்தைப் பற்றி எதற்காகக் கேட்கிறேன் தெரியுமா?" ‘எதற்கு?” "தம் தந்தைக்கு ஓர் அவமானம் எதிர்ப்பு -என்றால் அதனைத் தகர்த்தெறியக் கிளர்ந்தெழும் அளவுக்கு மேசனசுக்குப்பிள்ளைகள் இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளத்தான்." அவருடைய பிள்ளைகளைப் பற்றியெல்லம் எனக்கொன்றும் தெரியாது. "நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே! நேற்று வரை அகஸ்டஸின் நெருங்கிய நண்பர்தானே மேசனஸ்?" செழியனின் இந்த வினாவுக்கு உடனடியாக விடையிறுத்திடாத ஜூனோ, சில நொடிகள் சென்றதும் மிகவும் மெல்லிய குரலில் இப்படிக் கேட்டாள்: "ரோமாபுரியிலுள்ள பெரிய மனிதர்களின் குடும்பங்களைப் பற்றியோ அகஸ்டஸின் பகைவர்களைப் பற்றியோ அறிந்துகொண்டு உங்களுக்கு என்ன ஆகப்போகிறது? நான் கேட்கிறேனே என்று கோபித் துக் கொள்ளக்கூடாது; தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையே உறவை வளர்க்க வந்தீர்களா? இல்லை, உளவறிய வந்தீர்களா?" ஜூனோ இப்படி மடக்கியதும் செழியன் உண்மையிலேயே வெல வெலத்துப் போய்விட்டான். தன் மீது தவறான ஐயப்பாடு கொண்டு விட்டாளோ என்றும் அஞ்சினான். எனினும் அந்த அச்சத்தினை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஏதோ வியப்பினில் ஆழ்ந்தவனைப் போல் நகைப்பொலியை உதிர்த்திட்டான்.