பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

557


ரோமாபுரிப் பாண்டியன் 557 சற்றே பிளந்திருந்த செவ்விதழ்கள் 'பல் என்னும் வெள்ளிச் சுரங்கம் உள்ளே இருக்கிறது!' என்று சொல்லாமற் சொல்லின. அயர்ந்து உறங்கிடும் தன்னை மறந்திட்ட நிலையிலும் அவளுடைய பூமுகம் எங்கணும் இழைந்திட்டது ஓர் அருமையான காந்தப்புன்னகை! தாமரையின் தளிர் முகத்தினில் தவழ்ந்திடுமே, அதே கனவுக்கோலக் காந்தப்புன்னகை. சட்டென்று ஓர் அச்சம் வந்து ஆட்டிப்படைத்திட்டது செழியனை. 'இந்த நேரத்தில் சிப்பியோவோ பணியாளோ வந்து ஜூனோ இந்தக் கோலத்தில் படுத்துறங்குவதைப் பார்த்து விட்டால் என்ன செய்வது? ஏதோ ஓர் உரிமையில்லாவிட்டால் அவனுடைய தனி அறையில், அதுவும் கட்டில் மெத்தையில் அவள் இப்படிக் கண்மூடிக் கிடந்திடு வாளா என்று எண்ணிட மாட்டார்களா? இவளுடைய விளையாட்டுத் தனமான போக்கினால் பெரும் இடர்கள் எல்லாம் விளைந்திடும் போல் இருக்கிறதே' என்று கிலியுற்ற செழியன் "ஜூனோ! ஜூனோ! என்று எழுப்பினான். ஊகூம்.. அவளோ விழிப்பதாக இல்லை. யாராவது வந்து பார்த்திடப் போகிறார்களே என்ற துடிப்பு மிகுதி யாகிவிட்டது செழியனுக்கு. வேறு வழியில்லை. எனவே தலையணை யாக மடங்கிப் பிணைத்திருந்த அவளுடைய கரங்களைத் தொட்டுப் பிடித்து விலக்கிவிட்டான். உடனே அவளுடைய இமைக் கதவுகள் திறந்தன. தூக்கக் கலக்கத்தில் மலங்க மலங்க விழித்திட்ட அவள் செழியனின் முகத்தினைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தாள். "நீங்கள் வந்து நெடுநேரம் ஆகிவிட்டதா?" என்று வினவியவாறே பரபரப்புடன் தன் உடையினைச் சரிசெய்து கொண்டாள். "இப்போது தான் வந்தேன். ஆமாம், நீ இப்படி வந்து இங்கே தூங்கிட லாமா?' - சற்றுக் கடுமை தெறித்தது செழியனின் குரலில். “உடல் அலுக்கை; ஒரே அசதி. தாங்கமுடியவில்லை. அதனால்தான் படுத்துவிட்டேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்!- கொஞ்சும் முறுவலு டன் கெஞ்சிய அவள், "எங்கே போயிருந்தீர்கள்? உங்களுக்காக எவ் வளவு நேரமாகக் காத்திருக்கிறேன் தெரியுமா? உங்கள் பணியாளைக் கூடத் தேடி அழைத்து வருமாறு அனுப்பி வைத்தேன். அவனைப் பார்க்க வில்லையா நீங்கள்?" என்று கேட்டாள். "இல்லையே! நான் நீராட்டக் கட்டத்திற்கு போய் இருந்தேன்! "எந்த 'பாத்'திற்கு?'