பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

559


ரோமாபுரிப் பாண்டியன் 559 "நீங்கள் தான் கண்டு பிடியுங்களேன் எதனுடைய ஈரல் என்று" - கேலியாக நகைத்திட்டாள் ஜூனோ. நன்றாகச் சுவைத்து மென்றிட்ட செழியனால் சரியாக அதனைக் கண்டுபிடித்திட முடியவில்லை. ஊகூம். எனக்குத் தெரியவில்லை" "இதைக்கூட உங்களால் கண்டுபிடித்திட முடியவில்லையே! நீங்கள் என்ன பெரிய தூதுவர்!” "கேலி புரிவது இருக்கட்டும். முதலில் இது எதனுடைய ஈரல் என்று சொல்!" "நீங்கள் இப்போது சுவைக்கின்ற இவை எல்லாமே ஈரல் துண்டுகள் அல்ல." "பிறகு?" "பலாமூசுத் துண்டுகளும் கலந்து இருக்கின்றன!" "அப்படியா? வியப்பாக இருக்கிறதே! அது சரி; இத்துணை அருமையாகச் சமையல் செய்தது யார்?” "நான்தான்!" "நீயா? ஏன் பொய் சொல்கிறாய்?" “ஏன் ? என்னைப் பார்த்தால் சமையல் செய்யக்கூடியவளாக உங்களுக்குத் தெரியவில்லையா?" "அகஸ்டஸ் பெருமகனாரின் அந்தரங்கச் செயலாளரைப் போலவே இயங்கி, வெளி அலுவல்களில் ஈடுபடும் உனக்குச் சமையல்கட்டிலே நுழைந்திட நேரம் எங்கே இருந்திடப் போகிறது? அது ஒருபுறம் இருக்க, ரோமாபுரியைச் சார்ந்திட்ட உனக்குத் தமிழகச் சமையலைப் போலவே செய்வது என்பது அவ்வளவு எளிதா என்ன?” "நீங்கள் என் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்திடாதது பற்றி நான் வருந்திடவும் இல்லை; வியந்திடவும் இல்லை. ஏனெனில் உங்கள் தமிழ்நாட்டுச் சமையலைச் சுவையாகச் செய்வது என்பது சற்றுக் கடினந்தான். ஆனால் இதனை நான் எப்படிக் கற்றுக் கொண்டேன் தெரியுமா?" "எப்படி?" ய "அலெக்சாண்டிரியா அரண்மனையிலே கிளியோபாத்ரா அரசி யிடம் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய போது, ஒரு யவனக்கிழவ ரிடம் உங்கள் தமிழ்மொழியினைக் கற்றுக் கொண்டேன் என்று உரைத்திட்டேன் அல்லவா?"