பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

கலைஞர் மு. கருணாநிதி


560 'ஆமாம்.' கலைஞர் மு. கருணாநிதி "அதே யவனக் கிழவர்தான் உங்கள் தமிழகச் சமையலையும் கற்றுத் தந்திட்டார். ஆனால் பல ஆண்டுகள் கழித்துச் செய்வதால் எப்படி இருந்திடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டேதான் இருந்தேன்; உண்மையைச் சொல்லுங்கள்! எப்படி இருக்கிறது?" - - "எவ்வாறு பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை! இத்துணை அற்புதமாக - மணங் கமழ்ந்திட நீ சமைக்கக்கூடும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் என் நெஞ்சம் நிறைந்திட வயிறு நிரம்பிட உணவினை உட்கொள்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்!" -செழியனின் உவகைப் பெருக்கிலே நீராடி வந்த புகழுரைகளை செவிமடுத்ததும் ஜுனோவின் ஆப்பிள் கன்னங்களிலே செக்கர் படர்ந்திட்டது, நாணத்தினால்! அவன் உணவருந்திடும் அழகினையே தன் பார்வையினால் பருகித் திளைத்திட்டாள் அந்தப் பருவச் சிட்டு. வயிறு புடைக்கத் தின்று முடித்திட்ட செழியனுக்கு உடனே படுத்துப் புரள வேண்டும்போல் இருந்தது. ஆனல் ஜூனோ அதற்கு இடந் தந்திடவில்லை. ..சிறிது நேரமாவது கண்ணயர்ந்து எழுந்திட்டால்தான் உண்ட களைப்பு நீங்கும் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்வது? உங்கள் வருகைக்காக இந்நேரம் எங்கள் அகஸ்டஸ் பெருமகனார் அங்கே வட்டக் கலையரங்கிலே காத்திருப்பாரே! விலங்குகள் - மனிதர்களுக்கிடையே நடைபெறும் சண்டை விளையாட் டுக்களையெல்லாம் நிறுத்தியும் வைத்திருப்பாரே! என்று அவனை விரைவுப்படுத்திட்டாள் அவள்.