ரோமாபுரிப் பாண்டியன்
563
ரோமாபுரிப் பாண்டியன் 563 "இவனும் அந்த மல்லர்கள் வகையினைச் சார்ந்திட்டவன்தானா?" என்று வினவினான் செழியன். "இல்லை, ஆனால் இவனும் சாவுத் தண்டனைப் பெற்ற கைதியே" என்றார் அகஸ்டஸ்: சிறிது நேரம்கூடச் சென்றிருக்காது. அந்த முரட்டுச் சிங்கம், கையிலே கருவியேதும் இல்லாமல் தனித்து மாட்டிக் கொண்டு விட்ட அந்த மனிதனைத் தன் கால் நகங்களாலும், கூரிய பற்களாலும் நார் நாராய்க் கிழித்துப் போட்டிட முனைந்தது. குருதி வெள்ளமோ குபுகுபுவென்று ஆறாய்ப் பாய்ந்திடலாயிற்று. தன் உயிரினை, விலங்கு மன்னனின் வெறிப் பசிக்கு இரையாகப் படைக்க நேர்ந்திட்ட அந்த அப்பாவி மனிதன் கதறித் துடித்திட்டான். அவனுடைய கதறல் ஒலி அந்த அரங்கத்தினையே அதிர்ந்திடச் செய்து விட்டது. அவன் ஆனால்; அவன், 'குய்யோ! முறையோ!' என்று கூவக் கூவ - உடலிலிருந்து குருதி வெள்ளம் பாயப் பாய ரோமானியர்கள் ஆர்ப்பரிப்பு அதிகமாயிற்றே அல்லாமல் குறைந்திடவில்லை. அவர்களுடைய இந்தக் கருணையற்ற போக்கினைக் கண்டு, செழியனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. "இந்த ரோமானியர்கள் என்ன மிருகங்களைவிட மிருக மனம் கொண்டவர்களாக இருக்கிறார்களே! ஒரு மனிதன் இறப்பதை - அதுவும் ஒரு சிங்கத்தினால் சின்னாபின்னமாகக் கிழிக்கப்பட்டு இறப்பதை இப்படியா மகிழ்ச்சியாரவாரம் செய்து வேடிக்கை பார்ப்பது? இவ்வளவு கேவலமாகவா இவர்களுடைய இதயக் கூடு பழுதுபட்டிட வேண்டும்?" அவன் வாய்விட்டே கூறி விட்டான், உணர்ச்சிவயப்பட்டு ஆனால் அவன் புகன்ற சொற்களைக் கேட்டு ஜூனோ திடுக்கிட்டுப் போனாள். அவற்றை எப்படி மொழி பெயர்ப்பது. அங்ஙனமே மொழி பெயர்த்திட்டால் அகஸ்டசுக்கு ஆத்திரம் வந்திடுமே? என்ன செய்வது என்றெல்லாம் திணறினாள் அவள். அகஸ்டசோ, “என்ன சொல்கிறார்?" என்றார் பின்புறம் திரும்பி. ஜூனோவோ வாயினைத் திறந்திடாமல் மிரள மிரள விழித்திட்டாள். “ம் என்ன விழிக்கிறாய்? அவர் என்ன கூறினார்?" என்று மீண்டும் அதட்டினார் அகஸ்டஸ். கடுமை கனன்றிட்ட அகஸ்டசின் அதட்டலைக்கேட்ட பின்னரே, 'தான் எவ்வளவு பெரிய தவறினைப் புரிந்திட்டோம்' என்று உணர்ந்திட லானான் செழியன், அத்துடன் ஏதுமறியாத ஜூனோவையும் ஓர்